பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



86 變

தாவோவின் - ஆண்பெண் அன்புறவு


வன்மையின் உள்ளே இருக்கும் அறிவுதான் மென்மையை அறிகிறது. சற்றே போதுமான நளினத்துடன் ஆணின் வன்மை பெண்ணைச் சந்திக்கிறது. அவளது மென்மையைப் புரிந்து கொள்கிறது. மென்மைக்குள் உள்ள அறிவு வன்மையை அறிகிறது. போதுமான வன்மையுடன் பெண்ணின் மென்மை ஆணைச் சந்திக்கிறது. அவனது வன்மையை அறிந்து கொள்கிறது.

வன்மையில் நளினமும், மென்மையில் வன்மையும்தான் ஒவ்வொன்றின் அறிவு. இதுதான் வெளிப்புறத்தை உட்புறம் அறிகிறது. இது அதைத் தொடுகிறது. ஒன்று மற்றதைப் புரிந்து கொள்கிறது. இது அதைத் தெரிந்துகொள்கிறது.

106. மென்மைப்படுதல்

உள்ளே உள்ள முழுமையை வெளிக்கொணர மென்மை அனுமதிக்கிறது. மென்மைதான் வெளியில் உள்ளதை உள்ளே முழுமையாக நுழைய அனுமதிக்கிறது.

107. பயன்படுத்தல்

வன்மை அடக்குவதாயும், மென்மை அனுமதிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இருந்தும், அதிக வன்மையும் அதிக மென்மையும் அதிகமாகவும், போதுமானதாக இல்லாமலும் இருக்கிறது. தடை செய்யும்