பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த கோவேந்தன்

變 87



மென்மையும், அனுமதிக்கும் கடினமும் உள்ளது ஆணும், பெண்ணும் ஒருவருக்கொருவர் ஒழுங்காக இருப்பதற்கு அவர்களது சமநிலை எங்குள்ளது?

பனி உறைந்த ஓடையில் மீன் நகர இயலாது, அல்லது அதிகாலைப் பணியில் நீந்த முடியாது வேர்கள் திடமான கல்லைக் கிழித்துச் செல்லவோ பறக்கும் மணலிலோ தங்க இயலாது. இருந்தும் மென்மையான காற்றில் பறவைகள் உயரே எழும்பிக் கடினமான நிலத்தில் நிறைவுடன் தங்குகின்றன.

எப்படி வன்மையையும், மென்மையையும் பயன்படுத்துவது என ஆண், பெண் கேட்கக் கூடாது ஆனால் இருவரும் ஒன்று சேர்ந்து பணிவுடன் இவற்றால் பயன்படுமாறு இருங்கள் பயன்படுத்தும் வகையில், மென்மையாக வன்மையுடனும் வன்மையாக மென்மையுடனும் இருங்கள்

மீனாகவும், ஓடும் சிற்றோடையாகவும் இருங்கள் வேராகவும், வேர் பாயும் நிலமாக இருங்கள் பறவையாக, காற்றாக இருங்கள்.

108. வன்மைக்கும் மென்மைக்கும் இடையே

வன்மையான மென்மையும், மென்மையான வன்மையும் தான் ஆண், பெண் இருவருக்குமிடையே உள்ள பிணைப்பு இது மாற்றத்திற்கு விட்டுக்