பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த கோவேந்தன்

變 93


இதனால் அவன் தன்னை அமைதிப்படுததி அடங்க முயலுகிறான்

பெண் ஆணின் வன்மையால் பலம் பெறுகிறாள். ஆண் பெண்ணின் மென்மையால் பலமடைகிறான்.

114. வன்மை ஒரு சுமை

வன்மை என்ற சுமையை ஒவ்வோர் ஆணும் பெண்ணும் மென்மையால் சமநிலைப்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும்

விட்டுக் கொடுக்கப், பலத்திற்குக் கூட அறிவு தேவை

வன்மையிலிருந்து எதிர்ப்பு கிளம்பி வருகிறது வன்மைக்கு விட்டுக் கொடுத்தல் வேண்டும் விட்டுக் கொடுக்கப் பலம் தேவை பலத்திற்குத் தேவை சமநிலை

மென்மையின்மையால், வன்மை தொல்லையின் மூலமாகும், வன்மை இல்லையானால் மென்மை துன்பத்தின் மூலமாகும்

115. வெறுமைப்படுத்தல்

வெறுமையாக்குவதால் எந்த இழப்புமில்லை பெறுவதற்காக வெறுமையாக்கிய கிண்ணம் இன்னமும் கிண்ணம்தான். அதனது உருவமும் அடையாளமும்