பக்கம்:தாஷ்கண்ட் வீடு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம் அது
நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம்!

இந்தவரிகளை .... அதன் உண்மைப் பொருளை அறிந்து கொள்ள--அதாவது; வெள்ளைக்காரர்கள் அறிந்துகொள்ள உதவியவர்களில் சிவசிதம்பரமும் ஒருவராம். அதாவது, அவரது பாட்டுத் திறத்தினால்தான் வெள்ளையன் வெளியேறவே திட்டமிட்டிருக்க வேண்டும் என்றும் பலர் அவரைப் புகழ்வதும் உண்டு. அப்படிப்பட்ட உணர்ச்சிப் பிழம்பு அவர்.

உழைப்பால் உயர்ந்தவர் சிவசிதம்பரம்.

காந்தியடிகளின் அறமும் நேருஜியின் துணிவும் கைவரப்பெற்றவர். பாரத நாட்டுத் தலைவர்கள் தமிழ் நாட்டுக்கு விஜயம் செய்த நேரங்களில் எல்லாம் அவர் தவறாமல் அவ்வவ்விடங்களுக்குச் சென்று, தலைவர்களையெல்லாம் சந்தித்து அவர்களுடைய அன்பையும் ஆசியையும் பெற்றவர் அவர்.

சுதந்திர விழாக்களுக்கு அவரது பெருநிதி தான் கை கொடுத்துதவியது.

தன்னலம் கருதாப்பணியால் உலகின்கண் உயர்ந்துவிட்ட தமிழ்ப் பெருந்தலைவர் காமராஜரை அவ்வூருக்கு வரவழைத்து விழாக் கொண்டாடத் திட்டம் வகுத்திருந்தார் அவர். அப்பொழுதே, தமது பெருமனையின் குடிபுகு விழாவையும் நடத்திவிட வேண்டுமென்றும் கருதியிருந்தார். ஆனால் தாய்