பக்கம்:தாஷ்கண்ட் வீடு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

தங்களை அழைத்து வரச் செய்தேன் ! என்றான் அரசன்.

நிலவுக் கதிர்கள் அத்தாணி மண்டபத்தில் அழகுறத் தவழ்ந்து விளையாடின.

"நீயோ வள்ளல்; தமிழுக்குக்கிட்டிய பெரு வள்ளல். அத்தகைய வள்ளலான நீ என்னையே வள்ளலாக ஆக்கி விட்டாயே, அதுவே நீ எனக் கருளிய ஓர் உயர்ந்த பரிசுதானே?- இதைக் காட்டிலும் உயர்ந்தபரிசாக இனி நீ என்ன எனக்குக் கொடுக்க வேண்டும் ?” என்றாள் தமிழ் பிராட்டி; உணர்ச்சிவசப்பட்டுப் பேசினாள் அவள். கோலூன்றிய கை தளர்ந்தது. ஆனால் தமிழ் ஊறிய நா தழைத்தது!

ஒளவையின் நன்றியறிவை உள்ளுறப் புகழ்ந்த வண்ணம், மறைத்து வைத்திருந்த அக் கருநெல்லிக்கனியினை அவளிடம் கொடுத்தான். "இதுதான் என்னுடைய பரிசில். சுவைமிக்க கனி இது. வேட்டைக்குச் சென்ற வழியில் கிட்டியது. அதை உங்கட்குக் கொடுக்கவே அழைத்தேன் !”

"நீ புசிக்க வில்லையா ?"

“ ஒன்றினை நான் ஏற்கெனவே புசித்திட்டேன்,தாயே !

“இவ்வளவு அருமையுடன் கொண்டிருந்த இக்கனியை நான் உண்ண விரும்பும் உனது ஆவலை