பக்கம்:தாஷ்கண்ட் வீடு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

ஈடேற்றுவதுவே என் கடமையன்றோ !” என்று சொல்லி அக்கனியைக் கனிவுடன் புசித்தாள் ஔவை மூதாட்டி.

அக்கனியினை உண்டு முடித்த பின்னரே, அக் கனியின் ஈடு இணையற்ற சீரும் சிறப்பும் பற்றிச் சொன்னான் அஞ்சி மன்னன்.

"ஆஹா! இவ்வளவு சிறப்புப் பெற்ற கனி ஒன்றை நீயும் உண்டதனால் தமிழ் வளர்க்கும் வள்ளளூக்கு நீண்ட ஆயுளும் கைகூடி வந்து விட்டது. இந்நிலை கண்டு என் உள்ளம் எவ்வளவு. குதூகலம் எய்துகிறது, தெரியுமா ? வேந்தே! உன் கொடைச் சிறப்பு பெரிது; உனக்குத் தமிழ்பால் உள்ள பாசம் பெரியது!" என்றாள் பாட்டி. அக் கனி உண்டதன் விளைவாக தன்னுள் ஏற்பட்டிருந்த மகத்தான மாறுதலை--உள்பலத்தை அவள் அறிந்தாள்.

"ஆஹா! எத்துணை சிறப்புக் கொண்டதாக இருக்கின்றது நீ அளித்த இந்நெல்லி!, வெகு அற்புதம்!... நீயும் ஒரு கனியைப் புசித்தனையே!-- என் உள்ளத்திடை ஏற்பட்ட மாறுதலை எப்படி உணர்கின்றாய் நீ?... இக்கனிகள் இன்னும் சில கிட்டுமா? உன் அவைப் புலவர் ஏனையோர்கட்கும் கொடுக்கலாமல்லவா?" என்றாள் ஔவை.

அதியமான் நெடுமான் அஞ்சி விரயத்தோடு சிரித்தான். "தாயே, உங்கள் உள்ளன்பு மகத்தானது; மாண்பு பூண்டது! ஆனால் இக்கனி