பக்கம்:தாஷ்கண்ட் வீடு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

"எங்கள் சொத்தைக் கொள்ளையடிப்பதில் நீ எவ்வளவு சந்தோஷப்படுகின்றாயோ?-அதுபோல நான் உங்கள் சொத்தைக் கொள்ளையடித்தால், உன்னுடைய மனம் எவ்வளவு பாடுபடும்?" என்று நான் கேட்டதுதான் தாமதம், உடனே அவன் என்ன செய்தான் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

அந்தத் திருடன் என்பாதங்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தான்; விழுந்து முடிந்ததும் எழுந்தான்; எழுந்து முடிந்ததும்அவன் பேசலானான்:

“இத்தகைய மகத்தான உண்மையை இது வரை எனக்கு யாருமே சொல்லித்தரவில்லை. உங்கள் போதனைக்குப் பெரிதும் நன்றி ! நான் இனி திருட மாட்டேன்!” என்று சொல்லிப் பிரிந்தார்.

ஒன்பதாம் அதிசயமாகத் தோன்றுகின்றதல்லவா?

அப்போது எனக்கு வயசு என்னவென்று. இப்போதாவது சொல்லிவிடத்தான் வேண்டும்.

அப்போது எனக்கு வயது :

ஆறுமாதம்! ஆறுநாள்...!

சரி.

நான் யாரென்று உங்களுக்குப் புரிந்ததா,இலையா?

ஆமாம், அடியேன்தான். அரிச்சந்திரன் நெ. 2...!