பக்கம்:தாஷ்கண்ட் வீடு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

பெற்று விட்டாயல்லவா? மெத்த மகிழ்ச்சி... எல்லாம் அவன் செயல்!...” என்று ஆசி கூறினான்.

லிங்கன், வேலன்,சுந்தன் ஆகிய மூன்று வீரப்புலிகளும் ஏமாற்றம் சூழ சிலைபோல நின்றார்கள். பீமன் போலிருக்கும் தங்களைவிட்டு, யாரோ பட்டிக்காட்டானுக்கு மெய்க்காப்பாளன் வேலை கிடைத்திருக்கிறதே என்று அதிசயப்பட்டார்கள்; ஆத்திரப்பட்டார்கள்.

‘மன்னர்பிரான் அவர்களைக் கண்டு என் நன்றியை எங்கள் குடும்பத்தின் சார்பில் தெரிவிக்க வேண்டும்...’ என்று கூட்டத்தை நெரித்துக் கொண்டு ஓடினான் இளைஞன் மாணிக்கம்.

“தம்பி நில்! மன்னனைப் பார்க்க வேண்டுமா ? இதோபார்...” என்று சொல்லிய அந்தக் கிழவன், தன் வேஷத்தைக் கலைத்தான்.

மன்னன் விஜயாலயன் தோன்றினான்! “ஆ!” என்றான் வாலிபன்!

“தம்பி! அதோபார், அந்த மூன்று பேர்களும் பார்க்க பீமன்சூரன் மாதிரி தோன்றுகிறார்கள். உடல் வளர்ந்திருக்கிறது; ஆனால் அவர்களுக்கு உள்ளம் வளரவில்லையே, பாவம்! நான் காலையில் ஆற்றில் அகப்பட்டுக் கொண்ட கிழவனாக நடித்ததுகூட வெறும் நாடகம்; என் சோதனையில் அவர்கள் மூவரும் தோற்றார்கள். உதவி கோரியபோது, ஆபத்துக்கு உதவாமல் ‘பூ’ என்று அலட்சியமாகப் போய்விட்டார்கள். இப்படிப்பட்டவர்-