பக்கம்:தாஷ்கண்ட் வீடு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49

களா என் நாட்டைக் காக்கப் போகிறார்கள் ? என் சோதனையில் முழுவெற்றிபெற்றவன் நீ ஒருவனே! எனக்கு ஆபத்துக்கு உதவினாய் உன் உயிரைக் கூடக் கருதாமல், இப்படிப்பட்ட உள்ளம்தான் மெய்க்காப்பாளனுக்குத் தேவையான முக்கிய பண்பு ஆகும். அதனால்தான் வெற்றி உனக்கு கிடைத்திருக்கிறது...நாட்டின் நன்மைக்கு உன் கருத்து முழுவதையும் பயன்படுத்திப் பணிசெய்.பிறந்த பொன்நாடு பெற்ற தாய் போல, நாட்டின் பெரு வாழ்வுதான் உன் வாழ்வின் வளர்ச்சியும் முன்னேற்றமும் ஆகும்...உனக்கு நல்லாயுள்தர இறைவனை இறைஞ்சுகிறோம்” என்று வாழ்த்தினார் மன்னர்.

மெய்க்காப்பாளன் மாணிக்கம் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தான் !

அந்த மூன்று சிங்கங்களும் தம் குற்றங்களை உணர்ந்து, மன்னனிடம் மண்டியிட்டு வணங்கி மன்னிப்புக் கோரினார்கள்!