பக்கம்:தாஷ்கண்ட் வீடு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

ஆண்டுகளுக்குமுன் தங்கள் நாட்டில் நடந்த இந்திர விழாவில் உங்கள் மைந்தன் காணாமல் போய் கடல் கடந்து களவாடிச் சென்ற கொள்ளைக் கூட்டத்தில் அகப்பட்டான்: அதிலிருந்து சுயநினைவின்றி இருந்த இளவரசர், சென்றமாதம் ஈழத்து மண்ணுக்குத் தம்பி வந்திருக்கின்றார். அப்போது தாங்கள் உலகிற்கு அனுப்பிய செய்தி-இளவரசைக் கண்டுபிடிக்க வேண்டிவிடுத்த வேண்டுகோள் கேட்டு, புத்தித் தெளிவு பெற்று உதவி கோரி எங்கள் மன்னரிடம் அண்டினார்.வேந்தே, இதோ உங்கள் இளவரசர்...” என்று சொல்லிய ராஜ தூதன், அப்புதிய இளைஞனை, அரசரின் கரங்களில் ஒப்புவித்தான்.

"தேவி பராசக்தி! என்ன சோதனை இதெல்லாம்!... இவர்கள் இரண்டு பேரில் யார் என் மகன்? இருவரும் ஒரே வடிவாகத் தோன்றுகின்றார்கள்...! நெற்றி வடு இவனுக்கும்கூட அமைந்திருக்கிறது... யார் என்னுடைய உண்மை மைந்தன். தாயே...?” என்று வேண்டினார் வேந்தன்.

திடுதிப்பென்று உள்ளே ஓடினார்: திரும்பிவந்த சமயம் அவர் கையில் 'பராசக்தியின் மந்திரவாள்’ பளிச்சிட்டது!

"இளைஞர்களே, உங்கள் இருவரில் யார் இந்த மந்திரவாளை ஒழுங்காகப் பிரயோகித்து, அதன் ரகசியத்தை வெளிப்படுத்துகிறீர்களோ, அவனை என் குலக்கொழுந்து என்று ஒப்புக்கொள்வேன்: