பக்கம்:தாஷ்கண்ட் வீடு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55

இந்த ரகசியம் எங்கள் வழித்தோன்றலுக்கே தெரியும்...”

தனித்தனியே இளைஞர்கள் இருவரும் வாள் பரிசோதனைக்கு இலக்காகினர். என்ன ஆச்சரியம்! இருவருமே அல்லவா வெற்றி பெற்றுவிட்டிருக்கிறார்கள்!'பராசக்தி துணை!' என்ற எழுத்துக்களை எவ்வளவு லாவகமாக வாள் முனையில் அடுக்கிவிட்டார்கள்...!

மன்னர் மன்னன் தேவி பராசக்தியின் படத்தின்முன் மண்டியிட்டு அழுதார்."பராசக்தி, இவ்விருவரில் யார் என் உண்மை மகன் ?...சொல், இல்லையேல் என் உயிரை எடுத்துக் கொள்...”

"அப்பா...' என்று புதிய இளைஞன் ஒடினான்.

"வேந்தே" என்று இளவரசக் கோலத்தில் இருந்த இளைஞன் ஒடினான்.

"வேந்தே! உங்கள் உண்மை மைந்தன் இதோ இவரேதான்...!உங்கள் பணியாள் ரவிசேகரனைஅறி வீர்களல்லவா? அவனேதான் இந்த ஏழை. அன்று கிழவன்போல வந்து உங்கள் வேலைக்காரனாகி, பிறகு உங்கள் திருக்குமாரரின் ஒவியத்தைத் தீட்டி, பிறகு உங்கள் மைந்தன் என்று போலிவேஷம் புனைந்ததெல்லாம் இதே அடிமைதான் பிரபோ! உங்கள் மைந்தனின் உருப்போல அசலாக என் தோற்றமும் அமைந்திருப்பதை அறிந்தேன். படைப்புப் புதிர் இது! என் உண்மைத் தோற்றத்தினால் ஏதாகிலும் விபரீதம்