பக்கம்:தாஷ்கண்ட் வீடு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தாஷ்கண்ட் வீடு

றந்தாங்கி அன்றைக்குத் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.

தியாகி சிவசிதம்பரம் அவர்களின் பங்களாவும் அன்றுதான் கிரகப்பிரவேசம். அதனால்தான், அவ்வூரின் அழகே தனிப்பட்ட மகிமையுடன் விளங்கிக் கொண்டிருந்தது.

திருவாளர் சிவசிதம்பரம் ஐந்து ஏக்கர் தியாகியல்ல; உண்மையிலேயே தியாகம் செய்த குடும்பத்தில் உதித்தவர். நாட்டின் விடுதலைக்கென அப் பகுதியில் நடைபெற்ற கிளர்ச்சியின்போது, அவர் சரியாக மூன்றரைமாதக் கடுங்காவல் தண்டனை அனுபவித்தார்.

"தாயின் மணிக்கொடி பாரீர் அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!"

பாரதியின் இப்பாடல் வரிகளைச் சிவசிதம்பரம் பாடக் கேட்கப்பயந்து விட்டானாம் வெள்ளைக்காரக் கலெக்டர் வின்ஸ்டன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாஷ்கண்ட்_வீடு.pdf/9&oldid=1112269" இலிருந்து மீள்விக்கப்பட்டது