உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிடத்தின் குரல்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எனவே தாராவியிலே தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்ற உறுப்பினராக ஆகி, அதன்பிறகு அமைச்சராக ஆகிற நல்ல வாய்ப்புப் பெற்ற பிரேமானந்த அவலே அவர்கள், இங்கு எடுத்துச்சொன்ன அந்தக் கருத்துக்கள் அடிப்படையில், தாராவியிலே வாழ்கிற தமிழர்களுடைய அங்கு வாழ்கிற ஏழை மக்களுடைய,பாட்டாளிகளுடைய கண்ணீரைத் துடைப்பதற்கான அந்தக் கடமையை நிறைவேற்றுவதிலே அவர்கள் தொடர்ந்து ஒத்துழைப் பார்கள், வெற்றி தேடித் தருவார்கள் என்ற நம்பிக்கை யும், அவர் தருகிற அந்த ஒத்துழைப்புக்காக தி.மு. கழகத்தின் சார்பில் என்னுடைய நன்றியையும் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். தாராவியிலே வாழ்கிற மக்களுடைய நிலைமையை நான் 15 ஆண்டுகளுக்கு முன்னாலேயும் பார்த்திருக் கிறேன், நேற்றும்கூட தாராவி பகுதிக்குச் சென்று பார்த் தேன். ஏழை மக்கள் வாழ்கிற பகுதி – உழைப்பாளிகள் வாழ்கிற பகுதி- குடிசையிலே வாழ்கிற மக்கள் நிரம்பி யிருக்கிற பகுதி அது. அப்படிப்பட்ட நிலையிலே இருக்க வேண்டிய அந்தச்சூழ்நிலை இன்றைக்கும் இந்த நாட்டிலே நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. அந்த நிலையை எண்ணிப் பார்த்தவர்கள்தான் பேரறிஞர் அண்ணா அவர்களும் தந்தை பெரியார் அவர் களும். அவர்கள் ஏழைகளைப்பற்றி எண்ணிப் பார்த் தார்கள். உத்தமர் காந்தியடிகள் எண்ணிப் பார்த்தார் கள். டாக்டர் அம்பேத்கார் எண்ணிப் பாரத்தார். சுவாமி விவேகானந்தர் எண்ணிப் பார்த்தார். வடலூர் வள்ளலார் ராமலிங்க அடிகளார் எண்ணிப் பார்த்தார். மிகப் பெரிய எம். என். ராய் பொதுவுடைமை இலட்சியவாதியான எண்ணிப் பார்த்தார். ஆனால் அப்படி எண்ணிப் பார்த்தவர்களிலே, ஏதேனும் சில திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டு

9

9