உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிடத்தின் குரல்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எவ்வளவு விரிவான கல்வியைப் பெற முடியும் என்பதற்கு அடையாளமாகத் திகழும் டாக்டர் அம்பேத்கார் அவர் கள், அகில இந்தியாவுக்கும் அரசியல் அரசியல் அமைப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்ட போது, அந்த அரசியல் சட்டத்தை இயற்றுவதற்குத் தகுதி படைத்தவர் யார் என்று தேடிப் பார்த்தபொழுது, தமிழ் நாட்டிலே அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரும், வேறு பல மாநிலத்திலே பல சட்ட நூல் வல்லுநர்களும் இருந்தாலும் கூட அவர்களை எல்லாம் விட மிகச் சிறந்த ஆற்றல் வாய்ந்தவர் டாக்டர் அம்பேத்கார்தான் என்று கருதப் பட்டு-பண்டித நேருவும், சர்தார் வல்லபாய் பட்டேலும், பாபு ராசேந்திர பிரசாத்தும் கேட்டுக் கொண்டு அந்த மாபெரும் பணியை ஏற்றுக்கொண்ட டாக்டர் அம்பேத் காரும் கூட, தாழ்த்தப்பட்ட மக்களுடைய வாழ்க்கை யிலே சமூதாயத்தில் மாற்றம் ஏற்படுத்துவதற்கு, குடிசை யிலே வாழ்கிற நிலையை மாற்றி அமைக்க வேண்டும் என்பதைப் பற்றி அவருடைய பெரும் பணிகளுக் கிடையே எண்ணிப்பார்க்க இயலாத நிலையில் அந்த அடிப்படையிலே எண்ணிப் பார்த்து எதையும் செய்ய வில்லை. இன்னும் சொல்லப்போனால் தாழ்த்தப்பட்ட மக்களும் மனிதர்கள். அவர்களைத் தாழ்த்துகிறவர்கள் மனிதர் அல்லர். அவர்கள் காட்டுமிராண்டிகள். எவன் சாதியை நம்புகிறானோ; எவன் சாதியினாலே தனக்கு உயர்வைத் தேடுகிறானோ; அவன் புரோகிதனாக இருந்தாலும், அவன் ஆண்டவனை அர்ச்சிப்பதால் தனித் தகுதி பெற்றவன் என்று கருதப்பட்டாலும், அவன் சகல கலா வல்லவனாக இருந்தாலும் அவன்தான் என்னுடைய எதிரி. எனவே இந்த புரோகிதத்தை ஒழிப்பது மூலமாகத்தான் சமுதாயத்தை வாழவைக்க முடியும் என்று எடுத்துக் காட்டிய சுயமரியாதை இயக்கத் தந்தை பெரியார் அவர்

13

13