உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிடத்தின் குரல்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

களும் கூட, இந்த தாழ்த்தப்பட்ட மக்களை வாழ வைப்ப தற்கான ஒரு திட்டத்தைப் பற்றி எண்ணிப் பார்க்கவில்லை. சர்வோதயத் தலைவர்- அகில் இந்தியாவிலே சமதர்ம உணர்வுக்கு அடிப்படையான பொது நோக்கத்தை சர் வோதய இயக்கத்தின் மூலமாகத் தோற்றுவித்த பெரு மதிப்பிற்குரிய சனநாயகக் காவலர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்கள் ஏழை மக்களுடைய குடிசைகளை எப்படி மாற்றியமைக்கலாம் என்பது பற்றி எண்ணிப் பார்க்கவில்லை. அவர்மீது நான் சொல்வது குற்றச்சாட்டு அல்ல, இந்தக் கோணத்தில் எண்ணிப் பார்க்க அவர்களுக்கு வாய்ப்பு இல்லை. ஆனால் 67ஆவது ஆண்டில் தமிழகத்தில் ஒரு மாபெரும். அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி, ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பேரறிஞர் அண்ணா அவர்கள் சமுதாயத்திலே அடித் தளத்திலே இருக்கிற மக்கள் மானம் மரியாதையோடு வாழவேண்டுமானால்; நொந்துபோய்க் கிடக்கிற மக்கள் நிம்மதியாக வாழ்கிற ஒரு நிலைமை ஏற்பட வேண்டுமானால், அவர்களுக்கு இந்தச் சமுதாயமும் அரசாங்கமும் கடமைப் பட்டு இருக்கிறது. அரசாங்கத்தின் வருமானத்திலே ஒரு பகுதியை அந்த மக்களுக்காக ஒதுக்குவதிலேதான் சம நீதியை உருவாக்க முடியும் என்று கருதி, பேரறிஞர் அண்ணா அவர்கள் எரிந்து போகிற குடிசையிலே வாழ்ந்து கொண்டிருக்கிற ஏழை மக்களுக்கு, அதுவும் எரிந்து போகிற குடிசைகளை நெருக்கமாகக் கட்டிக் கொண்டிருக் கிற 'சிலம்களாக' இருக்கிற அந்தப் பகுதியிலே குடி யிருக்கும் மக்களுக்கு எரியாத வீடுகளாவது கட்டித்தர வேண்டும் என்ற ஒரு இயக்கத்தினைத் தொடங்கி 1, 500 வீடுகளைச் சென்னையிலே கட்டித் தந்தார்கள்.

14

14