________________
அது ஓராண்டு காலத்திலே நடைபெற்ற காரியம். அடுத்த ஆண்டு அறிஞர் அண்ணா அவர்கள் மறைய நேரிட்டது. இரண்டாண்டு காலத்திற்கு மேல் அண்ணா முதலமைச்சராக இருக்கவில்லை. தமிழன் எல்லாவற்றிலேயும் ஏதாவது ஒரு வகையிலே இழப்புக்கு ஆளாகிக் கொண்டுதான் இருப்பான் என்ப தற்கு இணங்க, தமிழர்களுடைய வரலாற்றிலே நிம்மதி யாக ஒரு பத்தாண்டு காலம் செல்வதே கடினம் என்றிருக் கிற அந்தப் பரம்பரை நியதிக்கு ஏற்ப, பேரறிஞர் அண்ணா அவர்கள் இரண்டாவது ஆண்டு முதலமைச்சராக இருந்து அகில இந்தியாவும் பாராட்டுகிற ஒரு நிலைமையை ஏற் படுத்தி, வேறு பல மாநிலங்களுக்கு வழிகாட்டியாக விளங்கக் கூடிய நிலைமையைப் பெற்றபோது அறிஞர் அண்ணா அவர்கள் 69ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 2ஆம். நாள் இரவு இயற்கை எய்தி விட்டார்கள். அப்படி அண்ணா மறைந்தற்குப் பின்னர் பொறுப் பேற்றுக் கொண்ட அறிஞர் அண்ணாவினுடைய தம்பி, பெரியாருடைய மாணவர், தமிழ் இனத்தினுடைய தொண்டர், எழுத்துத் துறையிலே வல்லமைமிக்க கலைஞர், அரசியலிலே விற்பன்னர், இன்றைய தமிழ் இனத்தின் தன்மானத்தின் சின்னமாக விளங்குகின்ற கலைஞர் அவர் கள் பெரும்பாலோர் விருப்பத்திற்கு ஏற்ப அந்த ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, ஒரு இரண்டாண்டு காலம் ஆட்சி நடத்துவதற்குள்ளாக தாழ்த்தப்பட்ட சமுதாயத் தினர்தான் இந்த மனித சமுதாயத்திற்கே முதுகெலும்பாக இருக்கிறார்கள்; அவர்கள் வாழ்வு நிமிராவிட்டால் தமிழ்ச் சமுதாயமே தலை நிமிராது என்ற எண்ணத்தோடு, அவர் களுக்கு வாழ்வளிக்க வேண்டுமானால் குடிசைகளை மாற்றிக் கட்டிடங்களாக அமைக்க வேண்டும் என்று தீர்மானித்தார். ஏறத்தாழ சென்னை நகரத்திலே மட்டும்
15
15