________________
குடிசைமாற்று வாரியம் என்ற அமைப்பின் மூலமாக 27,000 குடிசை மாற்று வாரிய இல்லங்கள் கட்டி முடிக்கப் பட்டன, அடுத்த நான்காண்டு காலத்தில். சென்னை நகரத்திலே மட்டும் 27,000 இல்லங்கள். அந்த 27‘000 இல்லங்களுக்காக செலவிடப்பட்ட தொகை மட்டும் ஏறத்தாழ பதினாலு, பதினைந்து கோடி ரூபாய். இன்றைய தமிழக (அ. தி. மு. க.) அரசுக்கு வருமானம் வருவதுபோல வருகிற காலம் அல்ல அது. (இன்றைய தமிழக அரசுக்கு இரண்டு விதமான வருமானம் வருகிறது. ஒரு வருமானம் அரசாங்கம் மூலமாக வருகிற வருமானம்; இன்னொரு வருமானம் அரசாங்கம் ஆற்ற வேண்டிய கடமையை ஆற்றுவதிலே இடையிலே செய்கிற பேரத் திலே ஆட்சியாளருக்கு வருகிற வருமானம்.) எனவே அப்படிப்பட்ட வருமானம் இல்லாத அந்தக் காலத்தில் 15 கோடி ரூபாய் ஒதுக்கிச் சென்னை நகரத்திலே குடிசைகள் இருந்த பகுதிகளைக் கூடகோபுரங்களாக மாற்றிய பெருமை அகில இந்தியாவிலேயே கலைஞர் அவர்களுக்குத்தான் உரியது என்பதை நான் நினைவூட்ட விரும்புகிறேன். தாராவியை நினைக்கிற காரணத்தால் எனக்கு இந்த எண்ணங்கள் தோன்றின. அதேபோல தமிழ்நாடு முழுவதும் பரவலாக கிராமங்கள்தோறும் குடியிருக்கிற தாழ்த்தப்பட்ட மக் களுக்கு வாழ்வளிப்பதற்காக ஏறத்தாழ 35,000 வீடுகள் கட்டப்பட்டன. ஒரு வீட்டில் கணவன்-மனைவி- குழந் தைகள், ஒருவேளை அவர்களுடைய வயதான பெற்றோர் இப்படி ஐந்தாறு பேர்கள் இருக்கக்கூடிய சிறுசிறு வீடுகள் சிறு வீடுகள்தான். ஆனால் கல் கட்டிடமாக, சிமிண்டு கட்டிடமாக, வெள்ளத்திலே போகாததாக வெந்தீயிலே வேகாததாக, பனியும்-குளிரும் உள்ளே புகாததாக,
16
16