________________
காற்றடித்தால் கூரை கலைந்து ஓடாததாகக் கட்டப்பட்ட வீடுகள், ஏறத்தாழ 35,000 வீடுகள் தமிழகத்திலே' கட்டப்பட்டன. மராட்டிய மாநிலத்தினுடைய வீட்டுவசதி வாரியத் துறை அமைச்சர் மட்டுமே எண்ணினால் முடியும் என்று நான் கருதாவிட்டாலுங்கூட மராட்டிய மண்டலத்திலே- அதுவும் பம்பாய் நகரத்திலே இந்த நகரத்தினுடைய எழில் குன்றாமல் இருப்பதற்காக அப்படிப்பட்ட பணி தொடங்கப்பட வேண்டும். கடந்த பத்து ஆண்டு காலத் திலே மட்டும் பம்பாய் நகரம் இருமடங்கு வளர்ச்சி பெற்றி ருக்கிறது. கடலையே தூர்த்து வானளாவிய கட்டிடங்களைக் கட்டுகிற வாய்ப்பைப் பெற்றிருக்கிறது. கோடீஸ் வரருடைய பூமி என்று பெயர் பெற்றிருக்கிறது. மராட்டிய மன்னன் சிவாஜியை எண்ணிப் பார்த்தால் இந்தக் குபேரர்களைப் பார்க்கிற பொழுது, ஏழையாகத்தான் எனக்குத் தெரிகிறார்கள். எனவே அந்த அளவிற்குக் குபேரர்கள் வாழ்கிற இந்தப் பூமியில், மராட்டிய மண்ணில், ஏறத்தாழ 80 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள் என்ற பெருமை பெற்ற இந்தப் பெரும் நகரில், இன்னொரு 10 ஆண்டு காலத்தில் ஒன்றேகால் கோடி மக்கள் வாழக்கூடிய அவசியம் ஏற் பட்டு விடக்கூடிய இந்தப் பெருநகரில் இப்பொழுதுள்ள போக்குவரத்தெல்லாம் போதாது என்று சொல்லக்கூடிய கால கட்டத்தை நெருங்கக்கூடிய இந்தப் பம்பாய் நகரத் தில், எல்லா மக்களையும் வாழ வைத்திட செய்யப்படுகிற ஒரு கடமையாக, குடிசைகளை மாற்றிக் கல்கட்டிடங் அமைத்து, அந்தக் குடிசைகளிலே வாழ்ந்த மக்களை, வீடுகளிலே வாழச்செய்கிற பணியைத் தமிழ் நாட்டிலே கையாளப்பட்ட அந்த முறையில் இங்கே உள்ள இந்த அரசும் மேற்கொள்ள வேண்டும். அதன் களாக
17
17