உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிடத்தின் குரல்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மூலமாக தாராவி ஒரு பெரும் மாற்றம் காண வேண்டும் என்று நான் இந்த நேரத்திலே கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்திலே நடைபெற்ற அந்தக் குடிசை மாற்று வாரியக் கடமையை ஜெயப்பிரகாஷ் நாராயணன் பாராட் டினார்; பாபு ஜெகஜீவன்ராம் பாராட்டினார்; அதேபோல பீகார் மாநிலத்தைச் சேர்ந்த-போலோபஸ்வான் சாத்திரி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த தலைவர்-மத்திய அமைச்சராக இருந்தபோது பாராட்டினார்; வேறு பல முற்போக்குவாதிகள் பாராட்டினார்கள். பிரதமர் இந்திரா இந்திரா காந்தியும்கூட அந்தக் கட்டி டங்களைப் பற்றி ஒருமுறை பாராட்டு தெரிவித்தார்கள். வேறு சில பேர் வெளிப்படையாகப் பாராட்டவில்லை எனில், அவர்கள் பாராட்டினால் வேறு எங்கேயோ கொண்டு போய் விட்டுவிடுமோ என்ற அச்சத்தால் பாராட்டவில்லையே தவிர, வேறு காரணம் இல்லை. அதைப் பார்த்தவர்கள் எல்லாம் பாராட்டினார்கள். சென்னை நகரத்தினுடைய வளர்ச்சியிலே அது ஒரு தனிப்பங்கு வகிக்கிறது. ஏழை மக்களுக்கு வாழ்வளிப் பதிலே பெரும் பங்கு வகிக்கிறது என்பதை நான் நினை வூட்டுகிறேன். இன்றைக்கு அதே காரியம் தொடர்ந்து நடைபெறு கிறதா என்று நீங்கள் கேட்பீர்கள். நான் அதற்குப் பதில் சொல்ல முடியாது. அந்தக் காரியங்கள் எல்லாம் கலைஞர் செய்த காரணத்தால் இனியும் தொடரக்கூடாது என்று பெரும் பாலும் கைவிடப்பட்டிருக்கின்றன. அந்தக் காரியங்கள் இன்றைக்கு நடைபெறவில்லை. அந்தக் காரியங்களைத் தொடர்ந்து நடத்துவதே தவறு என்ற ஒரு எண்ணம் கூட இன்றைய (அ.இ.அ.தி.மு.க.) ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

18

18