________________
அவர்களுக்கு (அ.இ.அ.தி.மு.க.) அந்த எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் தெளிவுள்ளவர்களுக்கு இவர்கள் ஆட்சி நடத்துவதே தவறு என்ற எண்ணம் ஏற் பட்டிருக்கிறது. எனவே அப்படியொரு நிலைமையிலே தமிழகம் இன் றைக்குத் தத்தளித்தாலுங்கூட, இந்த அடிப்படையான உணர்வு இந்தியச் சமுதாயத்திற்குத் தேவை என்று நான் தெரிவிக்க விரும்புகிறேன். பேரறிஞர் அண்ணா அவர்களுடைய பெயரால் அறிஞர் அண்ணா அறிவாலயம்' என்னும்-மக்களுக்குப் பயன்தரக்கூடிய பல்வேறு பணிகளை நிறைவேற்றக்கூடிய ஓர் அமைப்பை பம்பாய் நகரத்திலே ஏற்படுத்துவதிலே நம்முடைய நண்பர்கள் மிகுந்த ஈடுபாடுடையவராக இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மிகப்பெரிய தத்துவஞானிகள் - சிந்தனையாளர்கள் உலகத்தையே ஒரு குடும்பமாக எண்ணக் கூடியவர்கள் தான் ஏழைகளைப் பற்றிக் கவலைப்படுவார்கள். பேரறிஞர் அண்ணா அவர்கள் ஏழைகளைப் பற்றித் தெரிவித்த கருத்து 'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்' என்ற கருத்து சமுதாயத்தினுடைய கண் ணோட்டத்தையே மாற்றியமைக்கக் கூடிய கருத்தாக அமைந்தது. செல்வர்களிடத்திலே சிரிப்பு எப்போதும் இருக்கக் கூடும். நடுத்தர நிலையிலே வாழ்கிற மக்களிடத்திலே கூடச் சிரிப்பு ஏற்படக்கூடும். மிக ஏழைகளாக இருக்கக் கூடிய மக்களிடத்திலே இருக்கிற வேதனையை எண்ணிப் பார்க்கக்கூடிய எந்த ஒரு அரசியல்வாதியும் சனநாயக வாதியாக இருந்தாலும், சமதர்மவாதியாக இருந்தாலும், பொதுவுடமைவாதியாக இருந்தாலும், பொதுத் தொண்டு
19
19