________________
ஆற்றுகிற யாராக இருந்தாலும், (சுதந்திரம் பெற்றிருக்கிற ஒரு நாட்டில் ஏழைகளுடைய மனத்தில் ஒரு நிறைவு- மகிழ்ச்சி இவற்றை ஏற்படுத்துவதிலேதான் சனநாயகம் வெற்றி பெற முடியும் என்பதை ஏற்கத்தான் செய்வர். அறிஞர் அண்ணா அவர்கள் அந்த உணர்வோடுதான் தன்னுடைய இலட்சியத்தை அமைத்துக் கொண்டார்கள். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பேன்; அந்த முயற்சிக்காக என் வாழ்நாளைச் செலவிடுவேன் என்னும் கொள்கையோடுதான் அண்ணா செயற்பட்டார். நம் முடைய தி. மு. கழகம் தோற்றுவிக்கப்பட்ட காலத்திலே யும் சரி; அதற்கு முன்னாலே திராவிடர் கழகத்திலே அறிஞர் அண்ணா அவர்களும், நானும், கலைஞர் அவர் களும் நம்முடைய கழகத்தினுடைய முன்னணித் தோழர் களாக உள்ள பலரும் இடம் பெற்றிருந்த அந்தக் காலத் திலேயும் சரி; அதற்கு முன்னாலே தந்தை பெரியார் அவர்கள் நீதிக் கட்சியினுடைய தலைவராகவும் அறிஞர் அண்ணா அவர்கள் அந்த நீதிக்கட்சியினுடைய செயலாள ராகவும் இருந்த காலத்திலும் சரி, இந்தக் கண்ணோட்டத் திலே தான் நீதிக் கட்சி-திராவிடர் கழகம்-திராவிட முன் னேற்றக் கழகம் ஆகியவை செயல்பட்டு வந்திருக்கின்றன என்பதை நான் நினைவூட்ட விரும்புகிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தோற் றத்தைப் பற்றி கடந்த முறை இங்கு வந்தபோது, 78-ஆம் ஆண்டு பம்பாய் நகரத்திலே பேசிய கலைஞர் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஒரு அரசியல் இயக்கத்தினுடைய வரலாறு என்று கூறுகிறபோது 1949ஆவது ஆண்டு அறிஞர் அண்ணா தி.மு.கழகத்தைத் தோற்றுவித்தபோதுதான் நாங்கள் உருவானோம் என்று நீங்கள் கருதலாம்.
20
20