உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிடத்தின் குரல்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆனால் இந்த அரசியல் இயக்கத்தினுடைய வித்தாக இருக்கின்ற கருத்துக்கள் தான் இவை. (நாமெல்லாம் திராவிடர்கள்; நம்முடைய பண்பாடு திராவிடப் பண் பாடு ; நம்முடைய திராவிட மொழிகளெல்லாம் தோன்று வதற்குக் காரணமாக இருந்த-மூலமொழியாக இருந்த மொழி நம்முடைய தமிழ் மொழி. அந்த மொழிக்குச் சொந்தக்காரர்களாகிய நாம் இன்றைய தினம் அந்த உணர்வு இழந்து இருக்கிறோம்; அதைப் போற்றத் தவறி இருக்கிறோம்; பிறமொழி ஆதிக்கத்திற்கு இடம் தந்திருக் கிறோம்; தமிழ்ப் பண்பாட்டைக் காப்பாற்றுகின்ற திறனற்று இருக்கின்றோம். தமிழ் நாகரிகம் எது என்று அறியாதவர்களாக இருக்கிறோம். இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்பதற்காகத் தான் நீதிக்கட்சிக்கே கூட, திராவிடர் இயக்கம் என்ற உணர்வை ஏற்படுத்தத் தக்கவகையில் 1944-ஆம் ஆண்டு இறுதியில் "திராவிடர் கழகம்" என்று பெயர் சூட்டப் பட்டது. அதற்கு முன்னாலே பிறந்த நீதிக்கட்சி இயக்கத்தை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். நீதிக் கட்சியைத் தோற்றுவித்த சர். பி. தியாகராய செட்டியார் என்ற பெரியவர் அவர்தான் சென்னை மாநகராட்சி தோன்று வதற்கு முன்னால், சென்னை நகரத்தினுடைய உள்ளாட்சி அமைப்பு முறையினுடைய-நகர சபையினுடைய முதல் வெள்ளையர் அல்லாத தலைவராக விளங்கியவர். The First Indian President of Madras City என்ற பெருமைக் குரியவர். வெள்ளைக்காரர்கள்தான். சென்னை அதுவரையில் நகரத்தினுடைய தலைவர்களாக இருப்பார்கள். அப்படி விளங்கிய தியாகராயர் துவக்கத்தில் காங்கிரஸ் இயக்கத் திலே ஈடுபட்டிருந்தவர்; தேசிய இயக்கத்தை எதிர்த்தவர் அல்ல.

தி.2

21