________________
ஆனால் தேசிய இயக்கத்திலே ஈடிபட்டிருந்தாலுங்கூட சென்னை மாநிலத்திலே தேசிய இயக்கம் என்பது ஒரு சாரார் கையிலே சிக்கிவிட்டது என்ற உணர்வோடு- அந்த இயக்கத்தின் மூலமாகச் செல்வாக்கைப் பெறக் கூடியவர்கள் பின் தங்கியவர்களாக இருக்க மாட்டார்கள், சமுதாயத்திலே அடித்தட்டு மக்களுக்கு ஆதரவு தருகிற வர்களாக இருக்க மாட்டார்கள் என்று கருதி, ஒரு தனி இயக்கம் தேவை என்ற குரல் எழுப்பி பின் தங்கிய மக்கள் சார்பாக 1917இல் நீதி கட்சியை உருவாக்கினார்.) அந்தக் காலத்திலே அவருக்கு உறுதுணையாக இருந் தவர் அறிஞர் டி. எம். நாயர். அவரும் காங்கிரஸ் இயக்கத் திலே இருந்தவர்தான். என்ற வெள்ளையர் காங்கிரஸ் இயக்கத்தை ஒரு காலத்திலே ஹியூம் ஆரம்பித்தபோது, இந்தியாவிலே வாழ்கிற மக்கள் வெள்ளைக்கார அரசாங்கத்தோடு ஒத் துழைத்து - அப்படி ஒத்துழைக்கிற காலத்தில் வெள்ளைக் கார அரசாங்கத்திடமிருந்து ஆட்சி அதிகாரத்தில் பெற வேண்டிய பங்கினை இந்திய மக்களுக்குப் பெற்றுத் தரு வதற்காகத்தான் காங்கிரஸ் கட்சியே தோன்றியது. அதே முறையிலே தியாகராயரும் டாக்டர் டி. எம். நாயரும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த டாக்டர் நடேசன் அவர்களும் சமுதாயத்தினுடைய அடித்தட்டு மக்களுக்காகக் குரல் எழுப்புகிற இயக்கமாக அதை உரு வாக்கி, "சவுத் இந்தியன் லிபரல் பெடரேஷன்" என்று ஆங்கிலத்திலே பெயரிட்டு, "ஜஸ்டிஸ்" என்ற பெயரில் பத்திரிகை நடத்திய காரணத்தால் "ஜஸ்டிஸ் கட்சி" என்ற பெயர்வந்து - அது மொழி பெயர்க்கப்பட்ட காரணத்தால் நீதிக் கட்சி என்ற பெயர் வழங்கப்பட்டு அந்த இயக்கத்தினுடைய பத்திரிகை 'திராவிடன்' என்று இருந்த காரணத்தால் அது திராவிடர் இயக்கம் என்று கூட அழைக்கப்படக் கூடிய நிலைமை இருந்தது.
22
22