________________
அதை நான் இங்கே குறிப்பிடுவது அந்த இயக்கம் தொடங்கிய காலத்திலே இருந்து தீண்டாமை கொடு மைக்கு முடிவு கட்டுகிற கடமைகள் தமிழ்நாட்டிலே தோன்றின. தீண்டத் தகாதவர்கள், தாழ்த்தப் பட்டவர்கள். பொதுக் கிணற்றிலே தண்ணீர் எடுக்கக் கூடாது என் றிருந்த நடைமுறை மாற்றப்பட்டது. தீண்டத்தகாதவர்கள், பள்ளிக்கூடத்திலே சேர்க்கப் படக்கூடாது என்றிருந்த கேடு கைவிடப்பட்டது. நடுத்தெருவிலே, தீண்டப்படாதவர்கள் நடக்கக் கூடாது என்றிருந்த தடை நீக்கப்பட்டது. நீதிக் கட்சி ஆட்சிக்கு வந்த 1921-ஆம் ஆண்டுக்கு முன்னால் வரையிலே பொதுக் கிணற்றிலே தீண்டத்தகாத வன் தண்ணீர் எடுத்தால் அரசாங்கமே கூடத்தண்டிக்கிற ஒரு நிலை இருந்தது. பொதுச்சாலையிலே தீண்டப்படாதவன் நடந்தால் அது குற்றமென்று எல்லோரும் ஒப்புக்கொள்கிற ஒரு கட்டம் இருந்தது. அந்த நிலைமையை நீதிக்கட்சி மாற்றி யது. அதேபோல அரசாங்க உத்தியோகங்களிலேயெல் லாம் "படித்தசாதி"யைச் சேர்ந்தவர்கள் பரம்பரையாக அனைத்து இடமும் பெற்று வந்த முறையை மாற்றியது. அதுவரையில் படிக்காத வகுப்பைச் சார்ந்தவர்கள் யார் படித்தாலும் அவர்கள் அரசாங்க உத்தியோகத்தில் இடம் பெறலாம் என்று சட்டம் வகுத்தது. அதற்காக பிராமணர் களுக்கு இவ்வளவு இடம், பிராமணரல்லாதாருக்கு இத் தனை இடம், இஸ்லாமியத் தோழர்களுக்கு இவ்வளவு இடம், கிறிஸ்தவர்களுக்கு இவ்வளவு இடம், தாழ்த்தப் பட்டவர்களுக்கு இவ்வளவு இடம் என்று ஒரு சமூக நீதி (சோஷியல் ஜஸ்டிஸ்) (நீதிக்கட்சி ஆட்சிக்காலத்திலே
23
23