உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிடத்தின் குரல்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தான் 1928-ஆம் ஆண்டில் முதன்முதலாக கம்யூனல் ஜி.ஓ. பிறப்பித்ததன் மூலம் கொண்டுவரப்பட்டது. அப்படி 1928-ஆம் ஆண்டிலே வந்தாலுங்கூட, 1978ஆம் ஆண்டிலேகூட அதற்கு எதிர்ப்பு இருக்கிறது, எந்தெந்த வடிவிலோ எதிர்ப்பு தலை தூக்குகிறது என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. 1947-ஆம் ஆண்டில் இந்த நாட்டிற்கு விடுதலை கிடைத்ததற்குப் பின்னாலே 1950இல் நிறைவேற்றப்பட்ட அரசியல் சட்டத்தின் பெயராலேயே உயர்நீதி மன்றத் திலே தொடுக்கப்பட்ட வழக்கின் மூலம் கம்யூனல் ஜி.ஓ. வீழ்த்தப்பட்டது. அந்த கம்யூனல் ஜி.ஓ. வீழ்த்தப்பட்ட நேரத்தில் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் அதற்கு எதிர்ப்புக் குரல் கொடுத்து தமிழ் நாட்டிலே ஒரு போராட் டத்தைத் தொடங்கியதால் அந்த உணர்வுகளைப் பெருந் தலைவர் காமராசர் புரிந்துகொண்ட காரணத்தால் -அந்த உணர்வுகளை பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களிடம் எடுத்துச்சொல்லி பின்தங்கிய மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் ஆகியோர்க்குரிய ஆகியோர்க்குரிய உரிமைகள் பறிக்கப்படக் கூடாது, அரசு உத்தியோகத்திலேயும் அவர்களுக்குரிய இடங்கள் ஓரளவாவது ஒதுக்கப்பட்டாக வேண்டும் என்று கேட்டு, பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் ஒப்புக் கொண்டு, அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே திருத்தம் கொண்டு வரப்பட்டது. தாழ்த்தப்பட்டவர் களுக்கு 100-க்கு 15 இடங்கள், பின்தங்கியவர்களுக்கு 100-க்கு ஏறத்தாழ 24 இடங்கள் என்று ஒரு வரையறை செய்து 'கம்யூனல் ஜி.ஓ. இன் ஏ டிபரண்ட் பார்ம்' என்று சொல்லத்தக்க வகையிலே அந்தப் பாகுபாடு-சென்னை மாநில அரசால் நடைமுறையில் ஏற்றுக் கொள்ளப் பட்டது.

24

24