உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிடத்தின் குரல்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சுயமரி அகில இந்தியாவிலேயும் வேறு எந்த மாநிலத்திலே யும் இல்லாத வகையில்-பின் தங்கியவர்களுக்காக, தாழ்த்தப்பட்டவர்களுக்காக, (அவர்களுடைய யாதைக்காக, இன உரிமைக்காக, பாதுகாப்புக்காக, கல்விக்காக முதல் முதல் வழிகாட்டிய நீதிக்கட்சி வழி யில், தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா வழியில், வந்த ஒரு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் திராவிட முன் னேற்றக் கழகத்தார் என்பதை நான் பெருமையோடு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.) அகில இந்தியாவில் பல பகுதிகள் அமைதியற்று கலவரப் பகுதியாக இருந்த காலத்தில் அமைதியான முறையில் இரட்டை ஆட்சி நடத்திக் காட்டிய பெருமை, அன்றைய சென்னை மாநிலத்திற்கும் நீதிக்கட்சிக்கும்தான் உண்டு. சென்னை மாநிலம் 'மெட்ராஸ் பிரசிடென்ஸி' என்று அழைக்கப்பட்ட மாநிலமாகும். அந்த மெட்ராஸ் பிரசி டென்ஸியிலே ஆந்திரத்தினுடைய பெரும்பகுதி அடங்கி இருந்தது. கேரளத்திலே ஒரு பகுதி சேர்ந்திருந்தது. கர்னாடகத்திலே ஒரு பகுதி உள்ளடங்கி இருந்தது. அந்தப் பகுதி ஏறத்தாழ திராவிடத்தினுடைய முழுத் தன்மை கொண்ட பகுதியாக இருந்தது. திராவிடம் என்று நான் சொல்லுகிறபோது, திராவிடப் பண்பாடு-திராவிட நாகரிகம் என்ற அடிப்படையிலேதான் சொல்லுகிறேன். இது வெறும் அரசியலுக்காக மட்டுமல்ல. "இந்தியாவில் வாழ்கிற மக்களில், விந்திய மலைக்குத் தெற்கே வாழ்பவர்களில் பெரும்பாலான மக்கள்-திரா விட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்- இந்தியாவினுடைய வரலாற்றிலே பெரிதாகப் பாராட்டிச் சொல்லப்படுகிற, ஆரிய இனக் கலாச்சாரத்தோடு, தென்னாட்டிலே வாழ்கிற திராவிட இன மக்களுக்கு எந்தக் காலத்திலும் மிக நெருக்

25

25