உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிடத்தின் குரல்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கமான உறவில்லை! அந்தக் கலாச்சாரத்தாலே, தென் திராவிடக் கலாச்சாரம் அதில் கலந்து மூழ்கி ட்டு விடவில்லை. அந்த தென்னாட்டுக் கலாச்சாரத்தை முற்றும் மறைத்துவிடக்கூடிய ஆற்றல் வேதத்திறகோ, ஆகமத் திற்கோ, புராணத்திற்கோ, சாஸ்திரத்திற்கோகூட இல்லை; சமஸ்கிருத மொழியாலே பரவிய அந்தக் கலாச்சாரம்- அந்தக் கலாச்சாரத்தின் பெயராலே புரோகிதர்களுக்குக் கிடைத்த செல்வாக்கு - இவைகளுக்கெல்லாம் அப்பாற் பட்டதாக ஒரு தனித்தன்மை உடையதாக - ஒரு பெரு நோக்குடையவர்களாக வாழ்கிற சமுதாயத்தார் தென் னாட்டிலே இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் - 'இன்றைக்கும் திராவிட நாகரிகம் என்கிற அந்தப் பழம் பெருமை யைக் காப்பாற்றுகின்ற சமுதாயமாகத்தான் தென்னாட்டு மக்கள் எனக்குத் தென்படுகிறார்கள்" என்று சுவாமி விவேகானந்தர் அவர்களே தெரிவித்திருக்கிறார்கள்.) அப்படி விவேகானந்தரே சிறப்பித்துச் சொல்கிற அளவுக்குக் திராவிடப் பண்பாடு இன்றுங்கூடக் காப் பாற்றப்படுகிறது. ( திராவிடக் கலை-நாகரிகம்-சிற்பம்-மொழி அத்தனை யும், முழுமையும், அழிக்கப்படாமலும் அழிந்து விடா மலும் விட்டு வைக்கப்பட்டிருக்கிற திராவிட மொழி இலக்கியங்கள் என்று சொல்லப்படும் பழந்தமிழ் இலக் கியங்களைப் பெற்றிருக்கிற பெருமைக்குரிய அந்தத் திராவிடத்தின் பெரும் பகுதி ஒரு காலத்தில் மெட்ராஸ் பிரசிடென்சியாக இருந்தது.) தமிழ்நாடு - ஆந்திரம் - கேரளம் - கர்னாடகம் இவை நான்கும் மொழியிலே முழுவதும்' திராவிடமாக இன்றைக் குங்கூடக் காணப்படுகின்றன.

26

26