உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிடத்தின் குரல்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கேரளத்திலே 400 ஆண்டுகளுக்கு முன்பு மலையாள மொழி என்ற ஒரு தனிமொழியே கிடையாது. 350 ஆண்டு களாகத்தான் மலையாளம் தனிமொழியாக வடிவம் பெற்று வழங்கி வருகிறது. இன்றைக்கும் கூட ஒரு மலையாளி பம்பாயிலே மலையாளம் பேசினால், அது அங்கிருக்கிற தமிழனுக்கு நன்றாகப் புரியும். இங்கே இருக்கிற தமிழன்-மலையாளி இருவருமே அதிக வேற்றுமையில்லாமல் பேசிப் பழக முடியும், தமிழ்நாட்டிலேதான் மலையாளி பேசுவது எங்களுக் குப் புரிவதில்லை. தமிழ் நாட்டிலே எங்களுக்குப் புரியாத தற்குக் காரணம், மலையாளத்தினை உச்சரிப்பதில் ஒலி வேற்றுமையடைந்து பிரிந்திருப்பதுதான்! அதேபோல ஆந்திராவில் இருப்போர் பேசும் தெலுங்கும், கர்னாடகாவிலிருப்போர் பேசும் கன்னட மும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே முழுவடிவு பெறா மல் ஏறத்தாழ ஒன்றாக இருந்தது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் கன்னடம் தனி வடிவம் பெற்றது. அம்மொழி தமிழ் - திராவிடச் சொற் களின் வேர்களை அப்படியே பெற்றிருப்பது. தெலுங்கு மொழிதான் ஓரளவு திரிந்து கொஞ்சம் வேறுபட்டிருக்கிறது. ஆனால், 'பஞ்சதிராவிடம்' என்று இலக்கியங்களிலே குறிப்பிடப்பட்ட இந்தப் பகுதிகளுக்கு, ஏன் அப்படி 'பஞ்ச திராவிடம்' ஐந்து திராவிடம் என்று பெயர் வைத் தார்கள் என்றால், ஆரிய கலாச்சாரத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளாத பகுதி என்ற காரணத்தாலேதான் அப்படிப் பெயரிட்டுக் குறிப்பிட்டார்கள்.

28

28