________________
அப்படி ஆரியர்கள் அச்சத்தோடு வாழ்ந்தது அந்தக் காலம். அச்சத்தோடு வாழ்ந்த அவர்களிடம் தத்துவச் சிந்தனை என்பது பிறக்கவில்லை; அப்படிப்பட்ட கருத் துக்கள் இடம்பெறவில்லை. எந்தவிதமான உயர்ந்த தத்துவ உணர்வும் அவர் களுக்குக் கிடையாது-தப்பிப் போகிற உணர்வு இருந்ததே தவிர, தத்துவ உணர்வு-தீவிர சிந்தனை-ஆழமான கருத் துக்கள் இடம் பெறாமல் இருந்தார்கள்.) மாக "அக்காலத்தில் அவர்கள் சாதாரண ஒரு போராட்ட வாழ்க்கை நடத்தி வந்தார்கள். அவர்கள் காட்டுப் பகுதியிலே வாழ்ந்தார்கள், ஆனால் அவர்கள் எந்த இடத்திலே வந்து வாழத் தொடங்கினார் களோ, அந்த மண்ணிலே வாழ்ந்து கொண்டிருக்கிற பழங்குடி மக்கள்-மொகஞ்சதாரோ ஹாரப்பா போன்ற அகழ்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில்-ஐயாயிரம் ஆண்டு களுக்கு முன்னாலே வாழ்ந்து கொண்டிருந்த மக்கள்- ஆரியர்களது வருகைக்கு முற்பட்டே நாகரிகத்தோடு திகழ்ந்த மக்கள் - அந்தக் காலத்திலேயே எழுத்துக்களை எழுதுவதற்கு அறிந்திருந்த மக்கள் - தங்களுடைய சிந்தனை களையெல்லாம் எழுதி வைத்தவர்கள்-கோல எழுத்து, வட் டெழுத்து முறைக்கு முன்னாலே ஓவிய எழுத்து என்ற எழுத்து முறைகளைப் பயன்படுத்தியவர்கள்-சிற்பங்கள் வடித்தவர்கள்-அழகழகான கட்டிடங்களைக் கட்டியவர் கள் - மக்களுடைய வசதிக்கேற்ப நகரங்கள் அமைத்துக் கொண்டவர்கள், வீசும் குளிர் காற்றையே தடுக்கும் வகையில் மதிற்சுவர்களைக் கட்டி, அவற்றையே நகர மாக்கிக் கொண்டவர்கள்-தண்ணீர் ஓடுவதற்கான கால் வாயை 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே வெட்டி யவர்கள்- சாக்கடைகள் அமைத்து சுகாதார வாழ்வு வாழ்ந்தவர்கள்; இவ்வளவு வசதிகளும் செய்துகொண்ட சூழ்நிலையிலே வாழ்ந்த மக்கள்தான், ஆரியர்களுக்கு முன்னாலே வாழ்ந்த திராவிட மக்கள். இந்தோ-ஆரியன்
31
31