________________
மக்களுக்கு முற்பட இங்கே வாழ்ந்த மக்கள். சுமேரிய மக்களோடு தொடர்புடையவர்களாக-மெசபடோமிய மக்களோடு எகிப்து நாட்டு மக்களோடுதொடர்புடையவர் களாக - குமரிமுனை மக்களோடு தொடர்புடையவர்களாக வாழ்ந்த மக்கள்தான்-இன்றைய பாகிஸ்தான் பகுதியிலே இருக்கிற சில நகரங்களிலே அன்றைக்கு வாழ்ந்திருந்த மக்கள் என்று ஈராஸ் பாதிரியார் போன்ற பேரறிஞர்கள் ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்னாலே ஆராய்ச்சி செய்து எடுத்துக் காட்டி இருக்கிறார்கள். மொஹஞ்சதாரோ-ஹரப்பா-இன்னும் செக்கோஸ்லோவேகியா நாட்டு அறிஞர்களும், ரஷ்ய புரட்சி அறிஞர்களும், நார்வே-ஸ்வீடன் நாட்டு அறிஞர்களும் அந்த மொஹஞ்சதாரோ-ஹாரப்பாவில் காணப்படும் எழுத்துக்களைப் பற்றியும், கட்டிடங்களைப் பற்றியும் இன்றைக்கும் தொடர்ந்து ஆராய்கிறார்கள், தமிழ்நாட்டிலே ஆதிச்சநல்லூர் என்று திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ஊரிலே கண்டெடுக்கப் பட்ட - அகழ்ந்தெடுக்கப்பட்ட - எத்தனையோ விதமான கலன்களும், புதுச்சேரிக்குப் பக்கத்திலே அரிக்கன்மேட்டிலே 40 ஆண்டுகளுக்கு முன்னாலே அகழ்ந்து எடுக்கப்பட்ட பல பொருள்களும், பூம்புகாருக்குப் பக்கத்திலே அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருள்களும் ஒரு பழைய வரலாற்றுத் தொடர்பையே எடுத்துக் காட்டுகின்றன. அந்த வரலாற்றுத் தொடர்பு மொகஞ்சதாரோ நாகரிகத்தோடு தொடர்புடையதாக இருக் ஹாரப்பா கிறது.
32
32