உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிடத்தின் குரல்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அவ்வளவு பழங்காலத்து மக்களிடத்திலே படிந்து கிடந்த எண்ணங்கள்-சிந்தனைகள் - கடவுட் கொள்கை கள் எல்லாம் பிற்காலத்திலே ஆரியர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களுடைய உபநிடதங்களிலே, ஆகமங்களிலே அவர்களே கண்டறிந்தவை இடம் பெற்றன. அவர்கள் போல (எழுதப்பட்ட மொழிதான் வடமொழியே தவிர, கைக்கொண்டு எடுத்தாண்ட தத்துவங்கள், சிந்தனைகள், கருத்துக்கள் எல்லாமே தமிழர்க்குச் சொந்த மானவை-திராவிடருக்குச் சொந்தமானவை என்று நானல்ல-ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக்காட்டுகிறார்கள்! 'பஞ்ச திராவிடம்' என்று நம் மக்கள் வாழ்ந்த பகுதி அழைக்கப்பட்டபோது ஆரியக் கருத்துக்களை அந்த பஞ்ச திராவிட மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மராட்டியத்திலே, வீரன் சிவாஜி வாழ்ந்த காலத்திலே இந்து சாம்ராஜ்யத்தை அமைத்துத் தீர வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்ட காரணத்தால் வீரன் சிவாஜி-ஒரு பக்தனாக-அதே நேரத்தில் ஒரு மாபெரும் வீரனாக- அஞ்சா நெஞ்சனாக -அலையெனப் பாய்ந்து வந்த எதிரி களின் படைகளைத் தடுத்து நிறுத்துகிற மாபெரும் போர் வீரனாக விளங்கி இருக்கிறான் என்றாலும், அவனுடைய மனத்திலே ஏற்பட்ட மத-சமய உணர்வுகள் ஏறத்தாழ 400-500 ஆண்டுகளுக்கு முன்னாலே, ஏற்பட்ட சூழ்நிலை யின் விளைவே தவிர, அதற்கு முன்னாலே, நீங்கள் ஆழ்ந்து நோக்கினால், மராட்டிய மண்டிலம் உட்பட ஆரியத்தினு டைய கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொள்ளாத பகுதிகயாகத்தான் இருந்தது என்பதாலேதான் மராட்டிய மும் பஞ்ச திராவிடத்திலே ஒரு பகுதியாகக் குறிப்பிடப் பட்டது, இதை அவர்களுக்கு (மராட்டியர்களுக்கு) நாம் அறி விக்க வேண்டும்.

33

33