________________
நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னே மலையாள மொழி அறிஞர்கள், 'மலையாளம் சமஸ்கிருதத்திலே இருந்து வந்தது என்றுதான் பேசுவார்கள். ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னாலே ஆந்திரா விலே உள்ள மொழி அறிஞர்கள்கூட தெலுங்கு மொழி சமஸ்கிருதத்திலே இருந்து வந்தது என்பார்கள். ஏனென்றால் அதனுடைய மேல் பூச்சு சமஸ்கிருதம், சொற்களை உருவாக்கும் முறையிலே சமஸ்கிருத ஆதிக்கம். எனவே தமிழோடு தொடர்பு இல்லை என்று அன்றைக்குக் கருதினார்கள், தமிழோடு உறவுடையது என்று சொல்வது பெருமையாகாது என்று கருதி அன்று மறுத்து வந்தார்கள். கடந்த 30, 40 ஆண்டுகளில், மொழி நூல் அறிஞர் கள் ஆராய்ந்து ஏற்ற ஒரு உண்மை தெலுங்கும் திராவிட மொழியே என்பது. ஒரு கோட்டை சிதைந்து புதைந்து போய், அதன் மேலே ஒரு காடு வளர்ந்திருக்குமானால், அந்தக் காட்டைப் பார்க்கும் ஒருவன் இது இன்ன காடு என்று று பெயரிட்டு அழைத்தாலும், அந்தக் காட்டை அழித்து விட்டு உள்ளே புகுந்து பார்த்தால் இது ஒரு காலத்திலே சிவாஜி வாழ்ந்த கோட்டை- இது ஒரு காலத் திலே ராஜா தேசிங்கு வாழ்ந்த கோட்டை-ஒரு காலத்திலே சேரன் செங்குட்டுவன் வாழ்ந்த கோட்டை-என்று அந்த வரலாற்று உண்மைகளைக் கண்டு பிடிப்பதைப் போல, இன்றைய தினம் அந்த மொழி நூல் அறிஞர்கள், இந்த மொழிகளுடைய அடி மூச்சே தமிழ் மொழிதான் என்று எடுத்துக் காட்டுகிறார்கள். இன்றைக்கிருக்கிற மேல் பூச்சு தான் நாம் முழு அளவும் ஏற்றுக் கொள்ளாத-விரும்பாத ஒரு நாகரிகமே தவிர, இந்தியாவின் அடி அமைப்பிலே உள்நோக்கிச் சென்று பார்த்தால், அதிலே திராவிடப் பண்பாடு,
34
34