________________
திராவிட நாகரிகம்-திராவிட கலாச்சாரம் ஆகியவையெல் லாம் இடம் பெற்றிருக்கின்றன என்பது தெளிவாகும். தமிழ் மொழியினுடைய வேர்ச் சொற்கள் வடமொழி யிலே கூட இடம் பெற்றிருக்கின்றன. பன்மொழிப் புலவர் அப்பாதுரையார் அவர்களும், பன்மொழிப் பேரறிஞர் தேவநேயப் பாவாணர் அவர் களும், மொழிநூல் துறையிலே ஆராய்ச்சி நடத்திய யாழ்ப் பாணம் ஞானப்பிரகாசர் என்ற பாதிரியாரும், மொழித் துறையிலே ஆராய்ச்சி நடத்துகின்ற வேறு சிலரும் தமிழ்ச் சொற்கள்தான் என்று கூறுவர். தமிழிலே உள்ள சில சொற்களின் வடிவு சற்றே திரிந்திருக்கலாம்; அந்த வேர்ச் சொற்கள்தான் வட மொழியை எழுத்து மொழியாக ஆக்குகிற போது அந்த மொழிக்குத் தேவையான மூல சொற்களாகப் பயன்பட்டன. இன்றைக்கும் சமஸ் கிருதத்தை ஆராய்ந்தால் ஒவ்வொரு சொல்லுக்கும் அதனு டைய மூல வேர்-தமிழிலே இருந்து பிறந்திருப்பதைக் காணலாம் என்று சான்றுகளோடு எடுத்துக் காட்டி இருக் கிறார்கள். இன்னும் ஒருபடி மேலே போய்ச் சொன்னால், உலக மொழிகளுக்கெல்லாம் முதல் மொழி தமிழ் மொழிதான் என்று இன்றைக்கு ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார் கள், முதல் மனிதன் தோன்றியது எங்கே? உலகம் தோன்றி ஏறத்தாழ 3 கோடி ஆண்டுகள் ஆகின்றன என்று சொல்வார்கள். பூமியில் உயிர்கள் தோன்றி 30 லட்சம் ஆண்டுகள் ஆகின்றன. மூன்று லட்சம் ஆண்டுகளாகின்றன மனிதன் தோன்றி. மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்னே தோன்றிய மனிதன் 'மனிதக் குரங்கு' வடிவினன் என்று கருதப்பட்ட தாக வரலாறு-விஞ்ஞான ஆராய்ச்சி.
35
35