________________
கருத்தில் சொல்லவில்லை. இயற்கையினுடைய விளைவு வரலாற்று உண்மை என்ற அளவில்தான் சொல்லு கிறேன். அப்படிப் பிறந்த தமிழ் மொழிக்குச் சொந்தக்காரர் களான தமிழர்கள் பெற்றிருந்த அந்த வளர்ந்த நாகரிகம் அந்த நாகரிகம் பண்பாடு-கலை, இசை, சிற்பம், ஓவியம், ஆகியவற்றைக் காக்கக் கூடிய ஒரு இயக்கமாகத்தான் இன்றைக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் செயலாற்றி வருகிறது. தமிழ்ப் பண்பாடு எவ்வளவு பெரிய இலக்கியச் செல்வத்தைப் பெற்றது என்பதைப் பற்றியும், புறநானூற் றிலே காணப்படுகிற வீரம்-வள்ளுவராலே விளக்கப் பட்ட அறம் - சிலப்பதிகாரத்திலே காணப்படுகிற முத் தமிழ் மேன்மை, இளங்கோ அடிகளுடைய மாட்சி- கண்ணகியினுடைய கற்புத்திறன்-சீவக சிந்தாமணியினு டைய கவிதை வளம், சேக்கிழாருடைய செந்தமிழ் இனிமை, இப்படிப்பட்ட எத்தனையோ வகையான சிறப் புக்களை இங்கே வருகின்ற தமிழறிஞர்கள் பேசும்போது நீங்கள் கேட்கக் கூடும். இந்த இலக்கியங்கள் எல்லாம் எப்போது பிறந்தன என்று நீங்கள் சிந்திக்க முற்பட்டால் அதற்கு முன்பே இலக்கியங்கள் பல பிறந்து, அந்த இலக்கியங்களுக்கான ஒரு இலக்கணம் தோன்றி-அவ்வாறு தோன்றிய இலக் கணங்களிலே முதலில் தோன்றிய 'அகத்தியம்' என்ற இலக்கண நூல் இன்றைக்கு இல்லை என்றாலும், அந்த அகத்தியனுடைய மாணாக்கன் என்று கூறப்படும் தொல் காப்பியன் இயற்றிய இலக்கணமான தொல்காப்பியம், இன்பைக்கு 2200 ஆண்டுகளுக்கு முன்னே தமிழகத்திலே இயற்றப்பட்டு இன்றைக்கும் கிடைக்கிறது.
தி.3
37