________________
வளவு காலத்திற்கு முன்னே புலவர்கள் பாடல் இயற்றத் தொடங்கியிருக்க வேண்டும் என்பதையும் நீங்கள் காண வேண்டும். அண்மையிலே கூட, தென்னாற்காடு மாவட்டத்தில்- 'ஜம்பை' என்ற ஒரு சிற்றூரின் மலைப் பகுதியில் 1850 ஆண்டுகளுக்கு முன்னாலே தமிழன் எழுதிய கல்வெட்டு- தகடூரை ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சி ஆட்சிக் காலத்திலே எழுதப்பட்ட கல்வெட்டு-திருக்கோவிலூரை ஆண்ட மன்னன் திருமுடிக்காரியை வென்ற அதியமான் நெடுமான் அஞ்சி அந்தப் பகுதிக்குச் சென்று அங்கே தனி - குகைக் கோயில் போன்ற ஒரு இடத்தை மலையிலே செதுக்கச் செய்து, அதிலே 'இது சத்யபுத்ர அதியமான் நெடுமான் அஞ்சி கட்டியதளி' என்று அன்றைய தமிழ் வரி வடிவில் எழுதிய கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இது நான்கைந்து நாட்களுக்கு முன்னாலே கல்வெட்டுத்துறை ஆராய்ச்சியாளர் ஒருவர் கட்டுரையாக 'தினமணியில்' வெளிவந்திருக்கிறது. எழுதிய 1850 ஆண்டுகளுக்கு முன்னால் என்றால் அது ஒளவையார் வாழ்ந்த சங்க காலம் ஆகும். 'சத்யபுத்ர' என்ற வடமொழியை அதியமான் நெடுமான் அஞ்சி அடைமொழியாகக் கொள்ள வேண் டிய நிலைமை என்ன என்றெல்லாம் இன்றைக்கு நாம் ஆராயத் தேவையில்லை. எனவே அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை யில், தமிழ் மொழி எத்தனையோ தொல்லைகளுக்கிடையில் இடர்ப்பாடுகளுக்கு இடையில் - ஆதிக்கவாதிகளுடைய எண்ண அலைகள் தமிழகத்திலே மோதிக்கொண்டிருந் தாலுங்கூட, அவைகளுக்கெல்லாம் ஈடு 39
கொடுத்து
39