உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிடத்தின் குரல்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்பதை எண்ணி நாம் பெருமைப்படலாம். ஆங்கிலம் அறிந்த தேசிய கவி பாரதியார் அவர் காலத்தில் "மெல்லத் தமிழ் இனிச்சாகும்" என்று ஒருவன் கூறக் கேட்டுத் துடித்திருக்கிறார். அந்தப் பாரதி கூறு கிறார்."தமிழ் இனி வாழாது என்கிறார்களே. அதைக் கேட்டு நான் வேதனைப்படுகிறேன். இந்தத் தமிழ் இனி வாழாதா? வாழ முடியாதா? வாழ வைக்க மாட்டோமா? என்ற உணர்வுக்கு ஆளாகி, கலைகள் எல்லாம் மேற்குத் திசையிலே வளர்ந்து கொண்டிருக்கின்றன. அவைகளை எல்லாம் இங்கே நந்தமிழினில் கொண்டு வர வேண்டும்" என்று பாரதியார் பாடுகிறார். ஏன் அப்படிப் பாடுகிறார் பாரதியார்? "யாமறிந்த மொழிகளிலே தமிழ் தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்ற உணர்வு அவரிடத் திலே தானாகவே பிறந்தது. 'யாமறிந்த மொழிகளிலே' என்று பாடுகிறார் என்றால் அவர் பல மொழிகள் அறிந்தவர் என்னும் உரிமையால் கூறுகிறார். அப்படிப்பட்ட உணர்வுபடைத்த பாரதிக்கு 'மெல்லத் தமிழ் இனிச் சாகும்' என்று பிறர் கூறக்கேட்டபோது உள்ளம் எப்படிப் பொங்கும் என்பதையே அவரது கவிதை காட்டுகிறது. தமிழைச் சாகவிடக் கூடாது என்று அவர் பாடியது 1910-12-இல். 1922-இல் அவர் மறைந்தே போய்விட்டார். பாரதி நிறை வாழ்வு வாழவில்லை.) அப்படிப்பட்ட பாரதியாரோடு நெருங்கிப் பழகிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பாரதியாருடைய அதே உணர்வைப் பெற்றவராக மேலும் அதனை வளர்த்து

40

40