________________
பகுத்தறிவுவாதியாக-புரட்சி உணர்வு கொண்ட சிந்தனை யாளராக தமிழுக்கு ஆக்கம் ஏற்படுத்துகிற அந்த நோக் கத்திலே பல்வேறு எழுச்சியூட்டும் கவிதைகளைப் பாடி வழங்கினார். தமிழைப் போற்றுகிற உணர்வு யாரிடத்தில் இருக்கு மானாலும், அவரெல்லாம் தமிழைக் காப்பாற்றக் கூடிய ஆற்றலைத் தமிழ் மக்களிடம் உருவாக்கி இருக்கிறார்கள். இன்றைக்கு ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு முன்னாலே ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சீகன் பால்க் (ZIEGEN BALG) என்னும் ஒரு பாதிரி, ஆசிய நாடுகளெல் லாம் சுற்றுப்பயணம் வருகிறார். தென்னாட்டிற்கும் வரு கிறார். சீனப் பயணிகளான யுவான் சுவாங், பாஹியான் போன்றவர்கள் வந்ததைப் போல அவர் வருகிறார். தென் னாட்டில் - தமிழகத்தில் சில ஆண்டுகள் தங்கியிருந்து ஆர்வத்தோடு தமிழ் மொழி பயின்று திரும்புகிறார். ஜெர்மன் நாட்டின் பாதிரி தென்னாட்டுக்கு வந்துவிட்டு ஜெர்மனிக்குத் திரும்புகிற வழியில் இங்கிலாந்துக்குச் செல்கிறார். இங்கிலாந்து நாட்டில் மிகப்பெரிய பாதிரி யாரான காண்டர்பரி பாதிரியார் இவரை வரவேற்கிறார். அந்த வரவேற்பு முதலாம் ஜார்ஜ் மன்னருடைய தலைமையிலே அளிக்கப்படுகிறது, காண்டர்பரி பாதிரி யார் அவரை வரவேற்கும்போது, இவ்வளவு சிறப்பு வாய்ந்த பேரறிஞரான -உலகம் சுற்றிய பாதிரியாரை ஒரு உயர்ந்த மொழியிலே நான் வரவேற்க விரும்புகிறேன். அப்படி வரவேற்பதற்கு ஏற்ற உயர்ந்த மொழியான லத்தீன் மொழியில் வரவேற்பிதழைப் படித்துக் கொடுக் கிறேன் என்று அந்த மொழியில் இயற்றப்பட்ட வரவேற் பிதழைப் படித்துக் கொடுக்கிறார்.
41
41