________________
மறைமலை அடிகளை மும்மொழி வல்லுநர் என்று சொல்லுவார்கள். தமிழிலும்-வடமொழியிலும் ஆங்கிலத்- திலும் வல்லுநர் அவர். (நான் வடமொழி பேசினால் எனக்கு வாழ்நாள் குறை யும். தமிழ் பேசினால் வாழ்நாள் நீடிக்கும். தமிழ் பேசு கிறவன் பேசுவது அவனது இருதயத்திற்கு அதிக வேலை தராத காரணத்தால் அவன் நெடிது வாழலாம். வடமொழி பேசினால் நீண்ட காலம் வாழ முடியாது" என்பார் அந்த மறைமலை அடிகள்: மிகச் சிறந்த அறிஞராக விளங்கிய பரிதிமாற் கலைஞர் என்னும் தமிழ்ப் பெயர் பூண்ட சூரியநாராயண சாஸ் திரியார் கிருத்துவக் கல்லூரியிலே 50 ஆண்டுகளுக்கு முன்னாலே பேராசிரியராகப் பணியாற்றியவர். "தமிழ் மொழியிலே பிற மொழிகளைக் கலந்து எழுது வது என்பது தமிழுக்கு இழுக்கு என்பது மட்டுமில்லை; தமிழனுக்கே கேவலம்; தமிழ் மொழி ஆற்றல் மிக்க மொழி. அந்த மொழியிலே பிறமொழிச் சொற்களைக் கலந்து அதை ஆற்றல் இல்லாத மொழி போலக் கேவலப் படுத்தாதீர்கள்” என்று அவர் சொல்வார். யாரோ ஒரு வடமொழிப் பண்டிதர் சூரியநாராயண சாஸ்திரியாரைப் பார்த்து "ஐயா, உன்னுடைய தமிழுக்கு 'முகம்' உண்டோ? என்று கேட்டார். 'தமிழ் அணங்கிற்கு முகமில்லை' என்று கருத்துப்பட கூறி முகம் என்ற சொல் தமிழிலே இல்லையே என்று வினவினார். உடனே பரிதிமாற் கலைஞர் சொன்னார், "தமிழுக்கு முகம் இல்லை என்று சொல்கிறாயே! அப்படிச் சொல்வ தற்கு காரணம் தமிழணங்கு தலைகுனிந்து கொண்டிருக் கிறாள். அதனாலே அவள் முகம் உமது கண்ணுக்குத் தெரியவில்லை". என்று.
45
45