உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிடத்தின் குரல்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தனம் -"தமிழன் என்று சொல்லடா - தலை நிமிர்ந்து நில் லடா" என்னும் பாட்டைப் பாடினாலுங்கூடத் தலை நிமிர்ந்து நிற்கத் தமிழனாலே முடியாத ஒரு இழிநிலை-இன்று தமிழர்களிடத்திலே காணப்படுகிறது.) தமிழன், தனி நாக ரிகம் உடைய தமிழ் இனத்தவன்; அவனது வரலாற்றுப் பெயரே திராவிடன் என்பது - அது பலருக்கு குறுகிய நோக்கமாகத் தோன்றுகிறது. ஆனால் மற்றவர்கட்கு அப்படி அல்ல, அவர்களது இனமும் மொழியும் அவர் கட்குப் பெருமை, வடமொழியின் பெருமை-தங்கள் மதக் கொள்கையின் மேன்மை - தங்கள் சாத்திரங்களின் அருமை தாங்கள் வகுத்த சாதி தருமத்தின் உயர்வு, ஆகியவை பகுத்தறிவுக்கு ஒவ்வாவிடினும், காலத்திற்கு ஏலாதனவென்றாலும் அதன் பெருமையைப் பேசி - நம் மவர் மீது ஆதிக்கம் செலுத்த முனைகின்றனர். அந்த ஆதிக்கத்தை மாற்றிட நம்முடைய பெரு மையை நாமுணர வேண்டாமா? நாமுணர மாட்டோமா? நாம் உணரக்கூடாதா? தமிழன் தலைநிமிர வேண்டும் என்றேன். தலைகுனி யாதே தமிழா என்றார் புரட்சிக் கவிஞர். "தமிழன் எவரையுந் தாழ்த்தான்; தமிழன் எவருக் குந் தாழான்" -என்பதே தமிழன் கண்ட நீதி. ஆனால், இன்று தமிழ்நாட்டிலேயே தமிழன் தலை நிமிர முடிய வில்லை. மற்ற இடங்களில் முடிகிறதோ, இல்லையோ எனக் குத் தெரியாது. "தமிழன் என்றோர் இனமுண்டு - தனியே அவர்க் கொரு குணம் உண்டு" என்று சொன்னாலும் தனியே என்ன குணம் என்று கேட்டால் எப்படியாவது, எவனிடத் திலாவது கெஞ்சிக் கூத்தாடி 'அவனவன் பிழைப்பு நடத் தினால் போதும் என்பதுதான் தனியே அவனுக்கு ஒரு குணமாக இன்று இருக்கிறதே தவிர வேறு அல்ல.

47

47