உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிடத்தின் குரல்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இல்லையானால், திராவிட முன்னேற்றக் கழகத்திலே பெரியாருடைய தொண்டர்களாக - அறிஞர் அண்ணாவி னுடைய தம்பிகளாக ஈடுபட்டவர்கள், திசைமாறிப்போய் இருப்பார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்களா? மக்கள் தடு மாறிப் போகிற அரசியல் நிலைமையைத், தமிழ்நாட்டிலே வளரவிட்டு இருப்பார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்களா? யாருக்கு உண்மை தெரியாது? யார் தமிழன் என்பதுகூட முக்கியமல்ல. யார் தமிழனுக்காக வாதாடக் கூடியவன்? என்பது மாற்று முகாமிலே இருக்கிற எங்க ளுடைய அருமை நண்பர்களுக்கெல்லாம் தெரியாதா? கலைஞரைவிட தமிழர்களுக்காக வாதாடக்கூடிய ஒருவரை அறிஞர் அண்ணாவிற்குப் பிறகு இந்த நாடு பெற்று இருக்கிறதா? கலைஞர் தலைமையில் செயற்படும் தி.மு. கழகத்தை விட வேறு எந்த அமைப்பின் மூலமாக-வேறு எந்த ஆட்சியின் மூலமாக-வேறு எந்தக் கொள்கை மூலமாகத் தமிழ் மக்களைக் காப்பாற்ற முடியும்? தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும். என்ற எண்ணத்தைவிட, தமிழ் இனத்திற்காக வாதாடவேண்டும் என்பதைவிட தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்றே அவர்கள் எண்ணுகிறார்கள். தங்களுக்கு இது ஒரு வாய்ப்பு. தவறினால் பிறகு கிடைக்காது. / இந்த ரயில் தவறினால் பிறகு பம்பாய் போக முடியாது. இந்த ரயிலை இழுக்கிற எஞ்சின் எந்த எஞ்சினாக இருந்தாலும்- அது தடம் புரளக்கூடிய எஞ்சினாக இருந்தாலும் சரி-அது எரிசாராயத்திலே ஓடுகிற எஞ்சினாக இருந்தாலும் சரி அந்த ரயிலிலே பயணம் செல்வதே முக்கியம் என்று கருதுகிற ஒரு மனப்பான்மை அவர்களுக்கு ஏற்பட்டு விட்டது; ஒரு இயக்கத்தினுடைய தலைவனோ ஒரு கட்சியை நடத்திச் செல்கிறவனோ நமக்கு நண்பனாக இருந்தால்தான்

48

48