________________
ஆனால் இலங்கையிலே வாழும் தமிழர்கள் இலங்கை யிலே இருந்து விரட்டி அடிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு சிங்களவர்களாலே தாக்கப்படுகிற பல் வேறு கொடுமைகளை நாங்கள் கேள்விப்பட்டோம். அந்த நேரத்தில், தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வை இந்திய அரசுக்கு அதிகமாகப் பிரதிபலிக்க வேண்டும்- இந்திய அரசு அது காரணமாக இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் வற்புறுத்தி எடுத்துக் கூறித் செய்ய தமிழர்களுக்குப் பாதுகாப்பு தரும்படியாகச் வேண்டும் என்று எண்ணினோம். சென்னை மாநகரத்தை அடுத்த திருவொற்றியூர் தனபதி என்ற ஒரு தோழர்-திருமணமான இளைஞர்-ஏறத் தாழ 30-பேருடன் இலங்கைககுச் சுற்றுப்பயணம் சென் றிருந்தபோது, தனபதி மட்டும் தனியாக ஒரு தேனீர் கடையில் இருந்தபொழுது அந்த வழியாகப் போன சில சிங்கள வெறியர்கள் இவன் தமிழன் என்று கண்டு கொண்டனர், உடனே அவன் எந்த ஊர் எந்த நாடு எங்கு இருந்து வந்தவன் என்று எதுபற்றியும் எண்ணாமல், தமிழன் என்று எண்ணியவுடன் கையிலிருந்த ஆயுதத் தால் வெட்டி வீழ்த்த அவன் அங்கேயே பிணமாக வீழ்ந் தான். மற்றவர்கள் ஓடித் தப்பினர். ) அந்தச் செய்தி தமிழ்நாட்டிற்கு வரவே, மிகுந்த வேதனை கொண்ட தி. மு. கழகம் ஒருநாள் அடையாள மறியல் நிகழ்ச்சியிலே ஈடுபட்டது. அடையாள மறியல் நிகழ்ச்சியிலே தி. மு. கழகம் ஈடு பட்டது என்று சொன்னால், ஒரு வேளை முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு தி. மு. கழகம் இந்த நிகழ்ச்சியிலே ஈடு பட அனுமதிக்கக்கூடாது என்ற எண்ணம் இருந்தாலுங் கூட, அவர்களை எல்லாம் கைது செய்து அன்று இரவோ
50
50