________________
காலை 9 மணிக்கு கலைஞர் அவரது வீட்டிலே இருந்து புறப்படுகிறபோது 150க்கு மேற்பட்டவர்கள், கைது செய்யப்பட்டார்கள். அன்று காலையில், வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணாசிலைக்கு தி. மு.க.வினர் யாருமே மாலை அணிவிக்க அனுமதிக்கப்படவில்லை. அங்கே ஆயிரக்கணக்கில் காவல் துறையினரைக் கொண்டுவந்து குவித்து, கூடியிருந்த பல்லாயிரக்கணக் கான மக்களை அடித்துத் துரத்தியும் கண்ணீர்ப் புகை வீச்சு நடத்தியும் கலைத்தார்கள். கலைஞர் கைது செய்யப்பட்ட செய்தி அறிந்த நாடு கொந்தளித்து எழுந்தது. ஏறத்தாழ 15 ஆயிரத்திற்கும் மேலான கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டார்கள். "கலைஞரைச் சிறையில் வைத்தால், நீங்கள் என்ன செய்ய முடியும்? நாங்கள் கலைஞரை மறியல் செய்ய அனு மதிக்க மாட்டோம், என்ற ஆணவப் போக்கோடு தமிழ கத்தின் முதலமைச்சராக ஆகிவிட்ட எம்.ஜி.ஆர். நடந்து கொண்ட காரணத்தால் நாடு கொதித்தெழுந்தது. மாவட் டங்களிலெல்லாம் வேலை நிறுத்தம்-ஆர்ப்பாட்டம் மறியல் ஊர்வலம் - உண்ணாவிரதம் என்று உணர்ச்சிமயமான ஒரு சூழ்நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்ட நேரத்தில் தமிழ் நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் - கழகத் தோழர்கள்- உறுதி வாய்ந்த உள்ளம் படைத்த உத்தமர்கள் தாங்கள் எப்படிப்பட்ட தியாகம் செய்தும் இயக்கத்தைக் காப் பாற்ற வேண்டும் என்ற உறுதிபடைத்த தோழர்கள் தங்களைத் தாங்களே தீக்குளித்துப் பலியிட்டுக்கொள்ள முனைந்து விட்டார்கள். தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்வது நாங்கள் எதிர் பார்த்ததும் அல்ல, விரும்பியதும் அல்ல; ஏற்றுக் கொள் வதும் அல்ல.
52
52