________________
ஆனால் அகில இந்தியாவிலே இந்திமொழி ஆதிக்கம் அரசியல் சட்டப்படி சட்டப்படி உருவாக்கப்படுகிறது என்னும் அதிர்ச்சி ஏற்பட்ட கால கட்டத்தில், 1964-ஆம் ஆண்டில் தொடங்கி 1965-ஆம் ஆண்டுவரை தமிழ் நாட்டிலே இந்தி ஆதிக்கத்தை எதிர்க்கிற வீர உணர்வு தமிழர்களுக்குத் தேவை என்பதற்காக, அன்றைக்குப்போராட்ட உணர்வு மிக்க இளைஞர்கள் தீக்குளித்துத் தங்களையே பலியிட்டுக் கொண்டு "தமிழுக்காக எங்களுடைய உயிரையே வழங்குகிறோம்; உடல் மண்ணுக்கு. உயிர் தமிழுக்கு. என்று எப்படி வழங்கினார்களோ அப்படி, தமிழினத் தலைவர் கலைஞரைச் சிறையிடுவதா என்று ஆவேசமுற்று தங்களையே தீக்கிரையாக்கிக்கொண்டு புதிய தியாக வரலாறு படைத்து இருக்கிறார்கள் இப்போது. இந்தி எதிர்ப்பு உணர்வினைக்காட்ட அன்று தீக் குளித்ததுபோல, இப்பொழுது இலங்கையிலே அந்த மண்ணுக்கே சொந்தக்காரர்களான தமிழர்களுக்கு இழைக்கப்படுகிற கொடுமைகளைக் கண்டித்துக் குரல் கொடுக்கிற இயக்கமான திராவிட முன்னேற்றக் கழ கத்தை அடக்கிவிடலாம் என்று எம். ஜி. ஆர். கருதுவதா? அந்த எண்ணம் வெற்றி பெறுவதா? தமிழர் உரிமைக்குக் குரல் கொடுக்கிறக் கலைஞரைச் சிறையிலே வைத்துவிட் டோம் என்று ஒரு ஆணவமா? என்ற உள்ளக் குமுறல் மனக் கொதிப்பு - கலைஞரைச் சிறையிட அனுமதித்து விட்டால் தமிழனுக்காக குரல் கொடுக்க யார் இருக்கிறார். கள்? அந்தோ தமிழகமே! உன் எதிர்காலம் இதுதானா? அந்த எதிர் காலத்தை மாற்றுகிற ஆற்றல் பிறக்காத என்று எண்ணி ஏக்கமுற்ற இளம் தோழர்கள் கோவிலடி பிருந்தாவன் - திருச்சி மனோகரன் - பெருந்துறை முத்துப் - பாண்டியன் - சென்னை மேரி அம்மையார் திருவாரூர் கிட்டு ஆகிய அருமைத் தோழர்கள் தீக்குளித்து உயிர் துறந் தார்கள்.
$-4
53