________________
பம்பாயில் அறிஞர் அண்ணா அறிவாலயக் கட்டிட நிதி திரட்டுவதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் கலந்துகொண்டு சிறப் புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின் மூலம் கட்டிட நிதி யாக ரூபாய் 25 ஆயிரம் திரண்டது. பேராசிரியர் அவர்கள் 19-10-81 திங்கட்கிழமையன்று பம்பாயில் மக்கள் நலக்கல்விக் கழகச் சார்பாக, அறிஞர் அண்ணா அறிவாலயக் கட்டிட நிதிக்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பம்பாய் சண்முகானந்தா மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திரு.த. மு. பொற்கோ வரவேற்புரையாற்ற, பம்பாய் கழகச் செயலாளர் திரு. எஸ். தியாகராசன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மராட்டிய மாநில வீட்டு வசதி வாரிய துணை அமைச்சர் மாண்புமிகு பிரேமானந்த அவலே அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். பேராசிரியர் அவர்கள், தமிழகத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களும், கலைஞர் அவர்களும் முதலமைச்சர் களாக இருந்து ஆற்றிய சமுதாயப்பணிகளையும், குறிப் பாகக் குடிசைவாழ் மக்களுக்கு அளித்த நல்வாழ்வுத் திட்டங்களையும் விளக்கினார். பேராசிரியர் மேலும் பேசு கையில் தமிழகத்தின் கடந்த கால வரலாறு-மராட்டியம் உள்ளிட்ட பழங்கால பஞ்சதிராவிடத்தின் மாண்புகள், தமிழ் மொழியின் சிறப்பு, குமரிக்கண்டத்தின் பெருமை, தமிழ் இலக்கியங்களின் அருமை, நீதிக்கட்சித் தலைவர் களின் குறிக்கோள் ஆகிய அனைத்தையும்பற்றி விரிவாக வும் விளக்கமாகவும் ஒன்றரை மணி நேரத்திற்குமேல் பேசினார்.
5
5