உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிடத்தின் குரல்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் நிகழ்த்திய உரை பம்பாய் நகரத்தில் நடைபெறுகிற இந்தச் இந்தச் சீரிய விழாவில் நான் கலந்துகொள்ளக் கூடிய நல்லதொரு வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டிருப்பதற்காக எனது உள மார்ந்த மகிழ்ச்சியையும் நன்றியையும் நான் உணர்வோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். கடமை பம்பாய் நகரத்தில் இந்த அளவு பெரிய வரவேற்பு காத்திருக்கிறது என்று தெரிந்திருக்குமானால். நான் இன்னும்கூட ஆறு திங்களுக்கு முன்னாலே வருவதற்கு முயன்றிருப்பேன். பம்பாய் நகரத்திலே உள்ள கழகத் தோழர்கள் எத்துணையோ தொல்லைகட்கு ஆட்பட்டவர்கள், பல்வேறு கடமைகளிலே ஈடுபட்டவர்கள்; தங்கள் தங்கள் குடும் பத்தைக் காப்பதே ஒரு பெருங்கடமையாக ஆகியுள்ள நிலையிலே இருக்கக்கூடியவர்கள்."அவர்கள் ஒரு இயக்கப் பணியில் எந்த அளவு ஈடுபட முடியும்?" என்ற எண்ணம் இருந்த காரணத்தினால்தான் சில ஆண்டுகளுக்கு முன் னாலே எனக்கு அழைப்பு கிடைத்த நேரத்திலே கூட நான் வருவதற்கு ஆர்வம் காட்ட முடியாதவனாக இருந்தேன். ஆனால் 1968-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 8ஆம் நாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழகத்தில் முதலமைச்ச ராக பொறுப்பேற்று இருந்த நேரத்தில் நான் பம்பாய் நகரத்திலே ஒரு இரவு தங்கி இங்கே நண்பர்களுடைய அன்பான வரவேற்பைப் பெற்று, பின்னர் மேல் நாடு களுக்கும், அண்ணா சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நியூயார்க் நகரத்திற்கும் செல்லுகிற அந்த வாய்ப்பைப் பெற்றேன்.

6

6