________________
தோழர் அப்பொழுது பம்பாய் நகரத்தினுடைய களின் ஆர்வத்தை நான் ஓரளவு புரிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். அதற்கு முன்னாலே ஒருமுறை பம்பாய் நகரத்திலே 1962-63 என்று கருதுகிறேன் - தாராவி போன்ற பகுதி களில் நடைபெற்ற கழகக் கூட்டங்களில் கலந்து கொள் வதற்காக நான் வந்திருக்கிறேன் என்றாலும், இன்றைய தினம் பம்பாய் நகரத்தினுடைய பல்வேறு பகுதிகளிலும் பணி செய்து வாழ்கிற, தொழில் செய்து வாழ்கிற, பாடு பட்டு வாழ்கிற ஏழை மக்களாக உள்ள-அப்படிப்பட்ட தோழர்கள் தாங்கள் தமிழர்களுக்காக, தமிழ் நாட்டிற் காக - தமிழ் இனத்திற்காகப் பாடுபடக் கடமைப்பட்டு இருக்கிறோம் என்ற உணர்வோடு, திராவிட முன்னேற்றக் கழகத்தை மிகப் பெரிய அளவிற்கு நல்ல முறையிலே வளர்த்து வருவதைக் காண்கிறபோது நான் உங்களை யெல்லாம் மனமாரப் பாராட்ட விரும்புகிறேன். நண்பர் தியாகராசன் அவர்களும் ஆரிய சங்காரன் அவர்களும், பெருமாள் அவர்களும், பொற்கோ அவர் களும் மற்ற தோழர்களும் முன்னணியில் இருந்து பொறுப்போடு செயல்படுவது காரணமாகும். நான் மற்ற வர்களுடைய பெயரைச் சொல்லாதது அவர்களுடைய பெயர்களை உடனடியாகச் சொல்வதற்கு நான் நினைவிலே வைத்திருக்காதது காரணமே தவிர அவர்கள் ஆற்றுகிற பணியை நான் குறைவாகக் கருதுவதாக, தயவுசெய்து அவர்கள் கருதிக்கொள்ள வேண்டாம். அவர்களுடைய பெயர்களை எல்லாம் நான் சொல்லக் கடமைப்பட்டவன். அவர்கள் ஆற்றி வருகிற பணி பொறுப்புணர்ச்சியோடு கடமையுணர்ச்சியோடு நடைபெறுகிற காரணத்தாலே தான் இந்த அளவு நல்லதொரு செல்வாக்கை மராட்டிய மாநிலத்து அமைச்சராக இருக்கிற நண்பர் பிரேமானந்த அவலே அவர்கள் பாராட்டக்கூடிய அளவிற்கு நீங்கள் பெற்று இருக்கிறீர்கள் என்று நான் கருதுகிறேன்.
7
7