உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிடத்தின் குரல்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குரல் அமைச்சராக இருக்கிற பிரேமானந்த அவலே அவர் கள் இங்கே உரையாற்றிய நேரத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்படுகிற அநீதியைக் குறித்து அதுவும் இலங்கை யிலே இழைக்கப்பட்ட அநீதி குறித்து தமிழ் மக்கள் வெகுண்டெழுந்த நேரத்தில் - வேதனையோடு எழுப்பிய நேரத்தில்-கடந்த எட்டு பத்தாண்டுகளுக்கு முன்னாலேயே அவர்களோடு சேர்ந்து நானும் கொடுத்து இருக்கிறேன் என்று தெரிவித்தார்கள். நல்ல உணர்வை இந்த நேரத்திலே நான் பாராட்ட விரும்புகிறேன். குரல் அந்த அந்த அமைச்சர் தாழ்த்தப்பட்டவர் என்பதால் தமிழர்களுக்கெல்லாம் உறவினராகி விட்டாரோ என்று நான் எண்ணுகிறேன். இருந்தாலும் மராட்டிய மாநிலமும் கூட திராவிடத்தோடு மிக நெருங்கிய உறவு உடையது என்ற காரணத்தால் அவலேயினுடைய உணர்ச்சி தமிழர் களுடைய உணர்ச்சியாக இருப்பதிலே ஆச்சரியம் இல்லை என்பதையும் நான் தெரிவிக்க விரும்புகிறேன். அதேபோல இப்பொழுது அவர் தேர்ந்தெடுக்கப்பட் டிருக்கிற இடமும் தாராவி தொகுதி என்பதிலே நான் பெருமைப்படுகிறேன். அவர் தாராவியிலேதான் தேர்ந்தெடுக்கப்பட முடியும் என்பதையும் நான் நினைவூட்ட விரும்புகிறேன். தாழ்த்தப்பட்டவர்களுக்கு உறுதுணையாக இருக்கிற தாராவி, தமிழர்கள் நிறைந்திருக்கிற பகுதி-அது தாழ்த் தப்பட்டவர்களோடு ஒன்றாக இருக்கக்கூடிய பகுதி என் பதையும், எங்களுளோடு தமிழர்களாகப் பெருமைப்படக் கூடியவர்கள் மாதுங்காவிலே வாழ்ந்தாலுங்கூட, செம் பூரிலே வாழ்ந்தாலுங்கூட, வேறு பல பகுதிகளிலே பம்பாய் நகரத்திலே வாழ்ந்தாலுங்கூட அதற்கெல்லாம் சற்று வேறாக இருப்பது தாராவி என்பதையும் நான் நினை நினைவூட்டுகிறேன்.

8

8