32
________________
32 நிலையில் ஆதிக்கம் செலுத்துபவருடைய செல்வாக்கு பெரிய அளவில் வேரூன்றி வளர்ந்துவிட்டது. "இந்தியாவில் வேறு எந்தப் பகுதியையும் விடப் பிராமணீயம் தென்னிந்தியாவில் தான் மிகவும் வல்லாண்மையுடையதாக இருந்து வருகிறது. ஏனெனில், அது வேறு எங்கும் அண்மைக்காலம் வரை அவ்வளவு சர்வ வல்லமை பொருந்திய சக்தியாக (விளங்கவில்லை. பிராமணர்கள் தென்னிந்தியாவில் ஆச்சார சம்பிரதாய மதவிடயங்களில் மட்டுமல்லாமல், பொருளாதாரத் துறைகளிலும் தலைமை செலுத்தினர் என்பதையே இது உணர்த்தும். அரசியல், அதிகாரம் இது திராவிட இயக்கம் பற்றிய கருத்தரங்கு என்பதால் வரலாற்று அடிப்படையில் ஒரு தெளிவான கருத்து உருவாக வேண்டும் என்பதற்காகவே இவற்றைச் சொல்கிறேன். சர் சங்கரன் நாயர் தேசியக் காங்கிரசிலே இருந்தவர். 1904 ஆம் ஆண்டு அவர் ஓர் அவையில் பேசுகிற போது, இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைக்குமானால் அந்தச் சுதந்திரத்தைச் சனநாயக முறையில் பயன்படுத்திக் கொள்ள நம்முடைய மக்கள் தகுதி பெற்றுள்ளார்களா? என்று ஒரு கேள்வி எழுப்புகிறார். அதைப்பற்றி 'இந்து' ஏட்டில் (A Hundred Years of the Hindu P 77-78) வந்த அப்படியே படிக்கிறேன். குறிப்பை Sir C. Sankaran Nair provoked a controversy in December, 1904, when he said in a speech, that India 'will never and ought not to be called into the councils of the Empire (UK) until we show we have fully and frankly accepted those principles of equality and brotherhood, upon which the British Government is based. இந்தியாவிலே உள்ள மக்களிடத்தில் சமத்துவமும், உடன்பிறப்பு உரிமையும் ஏற்பட்டால் தவிர சுதந்திரத்திற்கு நாம் தகுதி பெற்றவர்களாக ஆகாத நிலையில்,