35
________________
35 அல்ல - சிருங்கேரி மடத்திற்கு மடாதிபதியாக வரலாம் என்றெண்ணுவது இந்தியாவில் எவ்வளவு பெரிய துரோகமாகக் கருதப்படும்? சூத்திரன் எவ்வளவு அறிவாற்றல் பெற்றிருந்தாலும் அப்படிப்பட்ட தகுதி அவனுக்குத் தரப்படுமா? என்று கேட்டுவிட்டு அடுத்துச் சொல்கிறார், Why will people be so wilfully blind? Why do they refuse to find any difference between a mountain and a molehill? Where is Great Britain and alas! Where is India? எதற்காக மக்கள் உண்மை உணர்ந்தும், தாமே உடன்பட்டுக் கண்ணை மூடிக்கொள்ள வேண்டும்? எதற்காக மலைக்கும் கரையான் புற்றுக்கும் உள்ள வேற்றுமை எதையும் காண மறுப்பவர்களாக இருக்க வேண்டும்? இங்கிலாந்து எந்த நிலையில் இருக்கிறது? அந்தோ! இந்தியா எந்த நிலையில் இருக்கிறது? என்று கேட்கும் பாரதி அடுத்துக் கேட்கிறார். The National Congress, I readily concede, has some of India's best sons in its ranks and its aspirations are of the worthiest. But does anybody seriously believe, that a man who in his stony heart, condemns a babe widow to perpetual misery might be worthy to be placed at the helm of a rising people? தேசிய காங்கிரசு இந்தியாவின் சிறந்த மனிதர் (தலைவர்) சிலரை அதன் தலைமையில் பெற்றிருக்கிறது என்பதையும், அதன் நோக்கங்கள் உயர்ந்தவை என்பதையும் நான் இக்கணமே ஒப்புக் கொள்கிறேன். ஆயினும், இளம் பெண் ஒருத்தி கணவனை இழந்தால் என்றைக்கும் கொடுந் துன்பத்தில் உழலும் விதவையாகவே இருக்கவேண்டும் என்று சொல்கிற கல் நெஞ்சுடைய ஒருவர், எழுச்சி பெற்று வரும் இந்திய மக்களுடைய தலைவராக அமர்த்தப்படுவதற்குத் தகுதியுடையவர் என்று எவராயினும் உண்மையில் நம்புவரா? நம்ப முடியுமா?