36
________________
36 Bharathi, who signed himself as a member of the Madras Social Reform Association, added, "Without social reform, our political reform is a dream, a myth, for social slaves can never really understand political liberty. And until and unless our social conferences prove a success, our National Congress is nothing but glare and dust." சென்னைச் சமூகச் சீர்திருத்தச் சங்க உறுப்பினர் என்று தம்மைக் குறிப்பிட்டுக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள பாரதியார், சமுதாயச் சீர்திருத்தம் என்ற அடிப்படையான பணி நிறைவேற்றப்படாமல் காங்கிரசின் அரசியல் சீர்திருத்தப் பணி எவ்வளவுதான் நடைபெற்றாலுங்கூட அது வெறும் கனவாக, புராணக்கதையாகத்தான் இருக்கும். சமூக அடிமைகள் அரசியல் விடுதலையை எந்நாளும் உண்மையில் உணர முடியாது. நம்முடைய சமூகச் சீர்திருத்த மாநாடுகள் வெற்றி பெற்றாலன்றி வெற்றி பெறும் நாள் வரை நம்முடைய தேசிய காங்கிரசு மாநாடு கண்ணைக் கூசும் ஒளியும் தூசுமாகவே அமையும் என்றார். மானிட நேயம் கொண்ட பாரதி எழுப்பிய கேள்விகளினால் சுட்டப்பட்ட அந்த வைதிக வழிப்பட்ட அநீதியைத் துடைக்கத்தான் திராவிட இயக்கம் தோன்றியது எனலாம். - 1915வது ஆண்டு தியாகராயர் நீதிக்கட்சி தொடங்குவதற்கு முன்னர் ஒரு பிராமண சங்கம் கூடித் தீர்மானம் ஒன்று நிறைவேற்றியது. வேறு இனத்தின் கலப்பின்றிப் பிராமண இனத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பது அதன் கருத்தாகும். வேறு எந்தச் சமூகத்தோடும் உறவு கொண்டு விடாமல் பிராமண சமூகத்தைக் காப்பாற்றவேண்டும் என்பது அதன் வேண்டுகோள். அச்சமூகம் கலந்துபோய் 1500 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. வரலாற்று விளைவு அது. 100க்கு 95 பேர் அளவில் பிராமணர் அல்லாதார் வாழ்கிற